சக்சரான் அல்லது சக்செரான்(Chaghcharān, /æɡæˈrɑːn/; பாரசீக மொழி: چغچران‎), also called Chakhcheran) என்பது மத்திய ஆப்கானித்தானில் அமைந்துள்ள நகரமும் மாவட்டமும் ஆகும். இது முற்காலத்தில் ஆஹங்கரான் (Āhangarān பஷ்தூ: آهنګران) என்று அழைக்கப்பட்டது. இது கோர் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். சக்சரான் கடல் மட்டத்திலிருந்து 2,230 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

சக்சரான்
Chaghcharan
چغچران
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்கோர் மாகாணம்
ஏற்றம்
2,230 m (7,320 ft)
மக்கள்தொகை
 • நகரம்15,000
 • நகர்ப்புறம்
31,266 [1]
நேர வலயம்UTC+4:30

இந்நகரம் தாரி மொழியை பேசும் 15,000 மக்களைக் கொண்டுள்ளது. 2015 இன் மதிப்பீட்டின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 31,266 ஆகும். [2] இது ஒரு மாவட்டத்தையும் மொத்த பரப்பளவாக 2,614 ஏக்கர் நிலத்தையும் கொண்டுள்ளது. [3] சக்சரான் நகரத்தின் மொத்த குடியிருப்புக்களின் எண்ணிக்கை 3,474 ஆகும்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "The State of Afghan Cities report 2015". Archived from the original on 2015-10-31. பார்க்கப்பட்ட நாள் 2015-12-05.
  2. "The State of Afghan Cities report2015". Archived from the original on 2015-10-31. பார்க்கப்பட்ட நாள் 2015-12-05.
  3. "The State of Afghan Cities report 2015".
  4. "The State of Afghan Cities report2015".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்சரன்&oldid=3526462" இலிருந்து மீள்விக்கப்பட்டது