சாசியா இல்மி

சாசியா இல்மி (Shazia Ilmi) இந்திய சமூக செயற்பாட்டாளர் ஆவார். இவர் முன்னதாக இசுடார் நியூசு தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றினார். 2011, 2012 ஆண்டுகளில் அண்ணா அசாரே முன்னின்று நடத்திய ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் செய்தித் தொடர்பாளராக இருந்தார். ஜன் லோக்பால் மசோதா என்ற லோக்பால் மசோதாவை சட்டமாக இயற்ற ஊடக ஒருங்கிணைப்பாளராக பரப்புரை ஆற்றினார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த இல்மா மே 2014இல் அக்கட்சியை விட்டு விலகி ஜனவரி 16, 2015 இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[1]

சாசியா இல்மி
ஆம் ஆத்மி கட்சியில் இருந்தபோது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1970
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2015-தற்சமயம்)
பிற அரசியல்
தொடர்புகள்
ஆம் ஆத்மி கட்சி (2012-2014)
துணைவர்சஜித் மாலிக்
கல்விமக்கள் தொடர்பியல்
வேலைசமூக செயற்பாட்டாளர், செய்தியாளர்

மேற்கோள்கள் தொகு

  1. "Shazia Ilmi joins BJP, not to enter poll fray". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாசியா_இல்மி&oldid=2959712" இலிருந்து மீள்விக்கப்பட்டது