சாசியா காலித்

சாசிய காலித் (Shazia Khalid சிந்தி மொழி: شازيه خالد ) ( உருது: شازیہ خالد ) (பிறப்பு 1973) ஒரு மருத்துவர் மற்றும் பாக்கித்தானின் சுய் நகர பெண்களின் மனித உரிமை ஆர்வலர் ஆவார்.

பின்னணி தொகு

மருத்துவர் சாசியா காலித், குழாய் வரிசை பொறியாளரான காலித் ஜாஃபரை மணந்தார். 2005 ஆம் ஆண்டில் மருத்துவர் சாசியா பாக்கித்தான் பெட்ரோலியம் வரையறுக்கப்பட்ட (பிபிஎல்) ஊழியராக இருந்தார், மேலும் பிபிஎல் வழங்கிய விடுதியில் தனியாக வசிக்கும் போது கடந்த 18 மாதங்களாக நிறுவனத்தின் சுய் மருத்துவமனையில் பணிபுரிந்தார். முழு வசதிக்கான பாதுகாப்பு சேவைகள் குழு (DSG) மூலம் இந்த வசதி வழங்கப்பட்டது. [1] பிபிஎல் தனது கணவருக்கு வேலை தருவதாக உறுதியளித்த பின்னரே இவர் வேலையை ஒப்புக்கொண்டார். இருப்பினும்,இவரது கணவருக்கு வேலை வழங்கப்படவில்லை. [2]

வன்கலவி தொகு

ஜனவரி 2 இரவு மற்றும் 3 ஜனவரி 2005 அதிகாலை நேரங்களில், மருத்துவர் சாசியா யாரோ ஒருவர் தனது தலைமுடியை இழுத்து எழுப்பியதாகக் கூறினார். பலத்த பாதுகாப்புடன் கூடிய அரசுக்கு சொந்தமான இயற்கை எரிவாயு ஆலையில் , சுய், தேரா புக்தியில், இவர் ஒரு தடியால் கழுத்தை நெரித்தும், அச்சுறுத்தப்பட்டடு, கண்மூடித்தனமாக, தாக்கப்பட்டும், முகமூடி அணிந்தவனால் பலமுறை பாலியல் வன்கலவி செய்யப்பட்டார். தாக்குதலில் இவர் பலத்த காயமடைந்தார், ஆனால் இவளது கைகளை வடத்திலிருந்து விடுவித்து அருகில் உள்ள தாதி விடுதியில் உள்ள சகினா எனும் தாதியிடம் உதவி கேட்டார். பிபிஎல் மற்றும் டிசிஎம்ஓ நிர்வாகத்திற்கு சகினா தகவல் கொடுத்தார்; பணியில் உள்ள மருத்துவ ஊழியர்கள், மருத்துவர் முகமது அலி, மருத்துவர் இர்சாத், மருத்துவர் சைமா சித்திக், நர்ஸ் பிர்தவுசு மற்றும் சலீமுல்லா ஆகியோர் மருத்துவர் சாசியாவை சந்தித்தனர். இவரது கணவர் (அந்த நேரத்தில் லிபியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தார்) மற்றும் இவரது குடும்பத்தினரைத் தொடர்புகொள்வதற்கான இவரது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டது. [3] இவருக்கு மருத்துவ ரீதியாக சிகிச்சையளிப்பதற்கு பதிலாக, அதிகாரிகள் இவரை அமைதியாக இருக்கச் செய்வதற்காக மூன்று நாட்கள் மயக்க மருந்து கொடுத்து மயக்கமடையச் செய்து பின்னர் கராச்சியில் உள்ள அஸ்கர் மனநல மருத்துவமனைக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. [4]

வீட்டுக்காவல் தொகு

அந்த நேரத்தில் லிபியாவில் இருந்த இவரது கணவர் காலித், தனது மனைவியுடன் மீண்டும் இணைவதற்காக பாக்கித்தானுக்கு விரைந்தார். இவரது ஆதரவுடன், எசியா வன்கலவி அறிக்கையினை வெளியிட்டார். [5]

அறிக்கையைத் தொடர்ந்து, 2 மாத காலத்திற்கு, கராச்சியில் உள்ள ஒரு வீட்டில் காவல், இராணுவம் மற்றும் முஷரப் அதிகாரிகளின் "அதிகாரப்பூர்வமற்ற பாதுகாப்பின் கீழ்" இவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் மற்றும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் அல்லது பார்வையாளர்களை அணுக அனுமதிக்கப்படவில்லை . [6] கூடுதலாக, குற்றம் நடந்த இடம் மற்றும் மருத்துவர் சாஜியாவின் உடைகள் உட்பட சான்றாகக் கருதக்கூடிய அனைத்தும் சேதப்படுத்தப்பட்டது அல்லது அழிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு இவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது, மருத்துவர் சாஜியா மற்றும் இவரது குடும்பத்தினர் அமைதியாக இருக்கும்படி வற்புறுத்தப்பட்டனர். பாலியல் வன்கலவி வழக்கை பதிவு செய்யவோ அல்லது ஊடகங்களுக்கு பேசவோ மறுத்தனர். [3] [7]

இவரது கணவர் காலித் , எனது தாத்தா காலித்தை விவாகரத்து செய்யுமாறு கோரினார், ஏனெனில் இவர் வன்கலவிக்கு ஆளனதால் குடும்ப மரியாதைக்கு கறை ஏற்பட்டது எனக் கூறினார். ஆனால் அதனை நான் மறுத்துவிட்டேன். எனவே எனது தாத்தா சாஜியாவைக் கொல்ல ஒரு கும்பலை ஏவினார் எனக் கூறினார். [5] [8]

சான்றுகள் தொகு

  1. The Dr. Shazia Case Press Statement Joint Action Committee for People's Rights
  2. Another Face of Terror
  3. 3.0 3.1 Rape victim under pressure to keep mum
  4. kristof.html Another Face of Terror [தொடர்பிழந்த இணைப்பு]
  5. 5.0 5.1 Shazia Khalid – Twice Violated
  6. "Musharraf's Rape Cover-Up". Archived from the original on 2012-07-07. பார்க்கப்பட்ட நாள் 2021-09-16.
  7. Shazia Khalid and the fight for justice in Pakistan
  8. "I am not expecting justice: Dr Shazia". Archived from the original on 2011-06-14. பார்க்கப்பட்ட நாள் 2021-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாசியா_காலித்&oldid=3553318" இலிருந்து மீள்விக்கப்பட்டது