சாசியா சையத்

சாசியா சையத் (Shazia Syed) ஒரு பாக்கித்தானிய தொழிலதிபர் ஆவார், இவர் தற்போது யுனிலீவரில் குளோபல் பானங்களின் செயலாட்சித் துணைத் தலைவராக உள்ளார். ஷீவாஸ் யூனிலீவர் பாக்கித்தான் லிமிடெட்டின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியாக, நவம்பர் 2015 முதல் பிப்ரவரி 2020 வரை இருந்தார். அதற்கு முன் இவர் நவம்பர் 2013 முதல் அக்டோபர் 2015 வரை யூனிலீவர் இலங்கையின் தலைவராக பணியாற்றினார்.

நிறுவனத்தில் தனது 30 ஆண்டுகளில், இவர் நிறுவனத்தின் அனைத்து துறைகள் மற்றும் பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.

கல்வி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சாஜியா பாக்கித்தானில் உள்ள கைபர்-பக்துன்க்வா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். சையத் கிளேட்டன் மாநில பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். [1] [2]

இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன [3]

தொழில் வாழ்க்கை

தொகு

அக்டோபர் 1989 இல் யுனிலீவர் நிறுவனத்தில் சேர்ந்த சையத், மேலாண்மை பயிற்சியாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். [4]

டிசம்பர் 2000 இல், இவர் வியட்நாமிற்கு சென்றார், அங்கு யூனிலீவர் வியட்நாமில் வணிக அலகு தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் டிசம்பர் 2003 வரை மூன்று ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். [1] [3] [2]

ஜனவரி 2004 இல், இவர் பாக்கித்தானுக்குத் திரும்பினார் மற்றும் 2009 இல் புத்துணர்வூட்டுதல் சந்தைப்படுத்தல் துணைத் தலைவராக ஆவதற்கு முன்பு யூனிலீவர் பாக்கிஸ்தான் வரையறுக்கப்பட்ட குழுமத்தின் வீடு மற்றும் சுய பாதுகாப்பு பொருட்களின் வணிக பிரிவின் தலைவராக இருந்தார். [3]

ஏப்ரல் 2009 இல், இவர் நிர்வாக இயக்குனராக யூனிலீவர் பாக்கிஸ்தான் வரையறுக்கப்பட்ட குழுமத்தில் நியமிக்கப்பட்டார் [1] அதே நேரத்தில் உனிலீவர் உணவக நிறுவனத்தில் இயக்குநாராகப் பணியாற்றினார் . 2009 ஆம் ஆண்டில், பாக்கித்தானின் யூனிலீவரில் பனிக்கூழ் வணிகத்திற்கு ஒரு வருடம் தலைமை தாங்கினார். [1]

இவர் ஜனவரி 2010 முதல் மார்ச் 2016 வரை யூனிலீவர் பாக்கிஸ்தான் ஃபுட்ஸ் வரையறுக்கப்பட்ட குழுமத்தின் செயல் இயக்குனராகப் பணியாற்றினார். [1] நவம்பர் 2013 இல் யூனிலீவர் ஸ்ரீலங்கா வரையறுக்கப்பட்ட குழுமத்தின் நிறுவனத்தின் முதல் பெண் தலைவராக ஆவதற்கு முன்பு யூனிலீவர் பாக்கித்தான் வரையறுக்கப்பட்ட குழுமத்தின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் வாடிக்கையாளர் மேம்பாட்டுத் துணைத் தலைவராக பணியாற்றினார். [1] சையத்தின் தலைமையின் கீழ், யூனிலீவர் இலங்கை வணிகம் பரவலான வளர்ச்சியைக் கண்டது. [4] [5] அக்டோபர் 2015 வரை யூனிலீவர் இலங்கையின் தலைவராக இருந்தார். [1]இவர் ஏப்ரல் 2014 இல் யுனிலீவர் பாக்கித்தானில் நிர்வாக இயக்குநரானார். [1] [2] நவம்பர் 2015 இல், இவர் யூனிலீவர் பாக்கித்தான் வரையறுக்கப்பட்ட குழுமத்தில் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஆனார். [4] [6] மார்ச் 2016 இல், சையதுக்கு யூனிலீவர் பாக்கிஸ்தான் ஃபுட்ஸ் வரையறுக்கப்பட்ட குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. [1] [2] இப்போது இவர் யுனிலீவர் தலைமை அலுவலகமான ரோட்டர்டாமில் உலகளாவிய செயலாட்சித் தலைவராக உள்ளார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

தொகு

ஜூலை 2015 இல், இலங்கையின் பெண்கள் மேலாண்மை சையதுக்கு, "சிறந்த சர்வதேச மகளிர் தலைமைத்துவத்திற்கான" விருதை வழங்கியது. [7]

2016 ஆம் ஆண்டில், தி எக்ஸ்பிரசு திரிப்யூன், கூட்டாண்மை உலகில், பாக்கித்தானின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஆளுமைகளில் ஒருவராக இவரை குறிப்பிட்டது. [8]

இவர் பாக்கித்தான் வணிக குழுவின் இயக்குநராகவும், [1] தேசிய மேலாண்மை அறக்கட்டளையின் ஆளுநர் குழுவில் உறுப்பினராகவும், பாக்கித்தானின் டியூக் ஆஃப் எடின்பர்க் விருது அறக்கட்டளையின் அறங்காவலராகவும் பணியாற்றுகிறார். [9]

சான்றுகள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 "Shazia Syed". www.bloomberg.com. Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 28 January 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 "Pakistan's Only Powerful Women In Business". https://profit.pakistantoday.com.pk/2017/03/07/pakistans-only-powerful-women-in-business/. பார்த்த நாள்: 28 January 2019. 
  3. 3.0 3.1 3.2 "First ever female Chairperson at Unilever Sri Lanka Shazia assumes duties" (in English). Daily FT. 4 November 2013. http://www.ft.lk/front-page/first-ever-female-chairperson-at-unilever-sri-lanka-shazia-assumes-duties/44-209582. பார்த்த நாள்: 28 January 2019. 
  4. 4.0 4.1 4.2 "Outgoing: Unilever Pakistan to see change in CEO". The Express Tribune. 30 September 2015. https://tribune.com.pk/story/964679/outgoing-unilever-pakistan-to-see-change-in-ceo/. பார்த்த நாள்: 28 January 2019. 
  5. "Change in leadership at Unilever Pakistan". www.thenews.com.pk. https://www.thenews.com.pk/print/65033-darcis-wins-amersfoort-title. பார்த்த நாள்: 28 January 2019. 
  6. "Five female Pakistani CEOs breaking barriers". https://www.geo.tv/latest/185465-5-female-pakistani-ceos-breaking-barriers. பார்த்த நாள்: 28 January 2019. 
  7. "Unilever Sri Lanka affirms commitment to diversity and inclusion" (in English). www.ft.lk. http://www.ft.lk/hr/unilever-sri-lanka-affirms-commitment-to-diversity-and-inclusion/47-443043. பார்த்த நாள்: 28 January 2019. 
  8. "‘Pakistan’s economy at a juncture of turnaround’". The Express Tribune. 6 November 2016. https://tribune.com.pk/story/1222538/discussing-changing-dynamics-pakistans-economy-juncture-turnaround/. பார்த்த நாள்: 28 January 2019. 
  9. "Profile - Shazia Syed". CFA Institute. பார்க்கப்பட்ட நாள் 29 January 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாசியா_சையத்&oldid=3292401" இலிருந்து மீள்விக்கப்பட்டது