தி எக்சுபிரசு திரிப்யூன்

தி எக்சுபிரசு திரிப்யூன் (ஆங்கிலம் : The Express Tribune ) என்பது பாக்கித்தானை தளமாகக் கொண்ட ஒரு தினசரி ஆங்கில மொழி செய்தித்தாள் ஆகும். இலாக்சன் குழும நிறுவனங்களின் ஒரு பகுதியாக, இது டெய்லி எக்சுபிரசு ஊடகக் குழுவின் முதன்மை வெளியீடாகும். இது நியூயார்க் டைம்சின் உலகளாவிய பதிப்பான இன்டர்நேசனல் நியூயார்க் டைம்சுடன் இணைந்து பாக்கித்தானின் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஒரே செய்தித்தாள் ஆகும் . [1] கராச்சியை தலைமையிடமாகக் கொண்ட இது லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில் உள்ள அலுவலகங்களிலிருந்தும் செய்திகளை அச்சிடுகிறது. இது 2010 ஏப்ரல் 12, அன்று, அகல விரிதாள் வடிவத்தில், பாரம்பரிய பாக்கித்தானிய செய்தித்தாள்களிலிருந்து தனித்துவமான செய்தி வடிவமைப்புடன் தொடங்கப்பட்டது.[2]

அதன் தலையங்க நிலைப்பாடு சமூக தாராளமயத்துடன் அடையாளம் காணப்படுகிறது. மேலும் அதன் வாசகர்களின் எண்ணிக்கை பொதுவாக பாக்கித்தான் அரசியல் மற்றும் சமூக கருத்தின் பிரதான நீரோட்டத்தில் உள்ளது. செய்தித்தாள் உள்ளடக்கிய தலைப்புகளில் அரசியல், சர்வதேச விவகாரங்கள், பொருளாதாரம், முதலீடு, விளையாட்டு மற்றும் கலாச்சாரம் ஆகியவை அடங்கும் . இது பளபளப்பான தாள்களைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அன்று எக்சுபிரசு திரிப்யூன் இதழ் என்பதை வெளியிடுகிறது, இதில் சமூக வர்ணனை, நேர்காணல்கள் மற்றும் சமையல் குறிப்புகள், மதிப்புரைகள், பயண ஆலோசனைகள், வலைப்பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப செய்திகளுடன் நான்கு பக்க துணை நிரல் ஆகியவை அடங்கும். 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் நாட்டில் பரவலான இணைய வாசகர்களைக் கொண்டுள்ளது. [3]

எக்சுபிரசு ஊடகக் குழுவின் ஒரு பகுதி தொகு

எக்சுபிரசு திரிப்யூன் இதழ் உருது மொழி டெய்லி எக்சுபிரசு செய்தித்தாள் உள்ளிட்ட எக்சுபிரசு ஊடகக் குழுவின் பிற வணிகங்களையும் இணைக்கிறது. அதனுடன் இருபத்தி நான்கு மணி நேர உருது செய்தி நிலையம், எக்சுபிரசு நியூஸ் மற்றும் உருது பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிலையம் எக்சுபிரசு என்டர்டெயின்மென்ட் ஆகியவை உள்ளன . இது '@ இன்டர்நெட்' எனப்படும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இது எக்சுபிரசு 24/7 என்ற ஆங்கில மொழி செய்தி நிலையத்தை இயக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. இது தற்போது செயலிழந்துவிட்டது.

செய்தித் தாளின் நோக்கம் "நாங்கள் நம்புகின்ற தாராளமய விழுமியங்களையும் சமத்துவ மரபுகளையும் பாதுகாப்பதாகும், மேலும் இது தகவலறிந்த மற்றும் நுண்ணறிவுள்ள எழுத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டியது" என்பதாகும். [1]

ஊழியர்கள் தொகு

தி எக்சுபிரசு திரிப்யூனின் வெளியீட்டாளர் பிலால் அலி இலக்கானி, சுல்தான் அலி இலக்கானியின் மகன் ஆவார். அதன் முதல் நிர்வாக ஆசிரியர் முகம்மது சியாவுதீன், முன்பு டான் நாளிதழுடன் தொடர்புடையவர். அதன் முதல் ஆசிரியர் கமல் சித்திகி முன்பு தி நியூசு இதழுடன் தொடர்புடையவர். முன்னதாக, பகத் உசேன் எக்சுபிரசு திரிப்யூனின் நிர்வாக ஆசிரியரகவும், நவீத் உசேன் அதன் ஆசிரியராகவும் உள்ளனர்.

அணுகல் தொகு

எக்சுபிரசு திரிப்யூன் இணையத்தில் மின் தாள் வழியாகவும், செய்தி மற்றும் வலைப்பதிவுகளை உள்ளடக்கிய ஒரு நேரடி வலைத்தளம் மூலமாகவும் கிடைக்கிறது. அச்சு பதிப்பு வணிகர்கள் மூலமாகவோ, சந்தா வழியாகவோ அல்லது செய்தி நிலையங்களிலோ கிடைக்கிறது.

பயங்கரவாத தாக்குதல் மற்றும் சுய தணிக்கை தொகு

2013 டிசம்பர் 2, அன்று, எக்சுபிரஸசு ஊடகக் குழுமத்தின் அலுவலகங்கள் பயங்கரவாத தாக்குதலில் குறிவைக்கப்பட்டதில் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். [4] [5] பாக்கித்தான் அரசியல்வாதி அல்தாஃப் உசேன் இந்த தாக்குதலைக் கண்டித்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் என்றார். தாலிபான் இயக்கம் பின்னர் இத்தாக்குதல்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தங்கள் போர்க்குணமிக்க குழுவிற்கு எதிராக பத்திரிக்கை பிரச்சாரம் செய்வதாகவும் இதுவே தாக்குதலுக்கு காரணம் என்று குறிப்பிட்டது.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "About – The Express Tribune". பார்க்கப்பட்ட நாள் 29 July 2017.
  2. "16 English newspapers published locally in Pakistan". Pakistan Times. Archived from the original on 2022-03-30. பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.
  3. Bilal Lakhani, Express Tribune: Note from the publisher The Express Tribune/International New York Times April 12, 2012. Retrieved 29 July 2017
  4. "Express Media Group's Karachi office comes under attack". The Express Tribune/International New York Times. Agence-France Presse. December 2, 2013. http://tribune.com.pk/story/640116/express-news-office-under-attack/. பார்த்த நாள்: 29 July 2017. 
  5. "Liberal newspaper Express Tribune cowed into silence by Pakistani Taliban". தி கார்டியன். 28 February 2014. https://www.theguardian.com/world/2014/feb/28/liberal-newspaper-express-tribune-silenced-pakistani-taliban. பார்த்த நாள்: 29 July 2017. 

வெளி இணைப்புகள் தொகு