டான் (நாளிதழ்)
டான் (Dawn) என்பது பாகிஸ்தானிலிருந்து வெளிவருகின்ற மிகவும் பழமையான, அதிகம் வாசிக்கப்படுகின்ற ஒரு ஆங்கில நாளிதழாகும்.[1]
துவக்கம்
தொகுஇவ்விதழ் முகம்மது அலி ஜின்னாவால் புதுதில்லியில் (பிரித்தானியாவின் இந்தியா, இந்தியா) 26 அக்டோபர் 1941இல் அகில இந்திய முஸ்லீம் லீக்கின் இதழாகத் துவங்கப்பட்டது. இதன் முதல் இதழ் லடிபி அச்சகத்தில் 12 அக்டோபர் 1942இல் அச்சிடப்பட்டது.[2] முதலில் இது வார இதழாக வெளிவந்தது.[3].
பிற இதழ்கள்
தொகுஇவ்விதழ் பாகிஸ்தான் ஹெரால்டு பதிப்பகத்தாரால் வெளியிடப்படுகிறது. இவர்கள் ஹெரால்டு என்னும் பருவ இதழையும், ஸ்பைடர் என்னும் தகவல் தொழில்நுட்ப இதழையும் அரோரா என்னும் விளம்பர ஊடக இதழையும் வெளியிடுகின்றனர்.
கிளைகள்
தொகுஇவ்விதழின் அலுவலகங்கள் கராச்சி, சிந்த், லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் உள்ளன.[4]
இணைப்புகள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "16 English newspapers published locally in Pakistan". Pakistan Times. Archived from the original on 2022-03-30. பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.
- ↑ GoogleBooks, p.236
- ↑ Long, Roger D. (27 August 2017). "Dawn Delhi I: Genesis of a Newspaper" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1354278. பார்த்த நாள்: 27 August 2017.
- ↑ "Our International Business Representatives". Dawn Media Group. Archived from the original on 30 June 2006. பார்க்கப்பட்ட நாள் 29 July 2017.