சாடில் சிகரம் தேசியப் பூங்கா
சாடில் சிகரம் தேசியப் பூங்கா (Saddle Peak National Park) இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ளது. ஒரு தேசிய பூங்காவான இது 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[1][2]
காலநிலை
தொகுசாடில் சிகரம் தேசியப் பூங்காவின் பரப்பளவு 33 சதுர மைல்கள் அல்லது 85.47 சதுரகிலோமீட்டர்கள் ஆகும். குறிப்பாக கடல்சார்ந்த காலநிலை நிலவுகிறது. கோடை காலத்தில் 20-30 பாகை செல்சியசு வெப்பநிலை காணப்படுகிறது.[3] சூன் முதல் அக்டோபர் வரை இங்கு மழைக்காலமாகும்.[3]
விலங்குகள்
தொகுஅந்தமான் காட்டுப் பன்றி, அந்தமான் காட்டு மைனா, அந்தமான் இம்பீரியல் புறா, நீர் உடும்பு, ஓங்கில், திமிங்கிலம், உவர் நீர் முதலை போன்ற விலங்குகள் பூங்காவில் உள்ளன.[2][3]
தாவரங்கள்
தொகுசாடில் சிகரம் தேசிய பூங்காவை சுற்றிலும் இருப்பது ஈரமான, வெப்பமண்டல தாவரங்கள் நிறைந்த இலையுதிர் காடுகள் ஆகும். சிகோலோபியா, கிளெசுடேந்தசு ரோபசுட்டசு போன்ற இந்தியாவில் காணப்படாத தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன.[4].
மேற்கோள்கள்
தொகு- ↑ Bisht, R.S. (1995). National parks of India. New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, Govt. of India. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8123001789.
- ↑ 2.0 2.1 Negi, S.S. (1993). Biodiversity and its conservation in India. New Delhi: Indus. p. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185182884.
- ↑ 3.0 3.1 3.2 Negi, S.S. (2002). Handbook of national parks, wildlife sanctuaries, and biosphere reserves in India (3rd rev. ed.). New Delhi: Indus Pub. Co. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8173871280.
- ↑ New Reports to the Flora of India from Saddle Peak National Park, North Andaman. Rheedea. Vol. 19 (1 & 2) 69-71. 2009