சாண்டுபி ஏரி

சாண்டுபி ஏரி, இந்திய மாநிலமான அசாமின் காமரூப் மாவட்டத்திலுள்ள ஏரியாகும். இது குவகாத்தியில் இருந்து 64 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[1] இந்த ஏரி காரோ மலைக்குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியைக் காண சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

சாண்டுபி ஏரி
சாண்டுபி ஏரி

இந்த ஏரியில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் சங்டூபி திருவிழாவின் போது இங்கு வரலாம். இந்த திருவிழா ஜனவரி முதல் வாரம் நடைபெறும். திருவிழாவில் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பாரம்பரிய உணவு வகைகளையும் உண்டு மகிழலாம்.[2]

போக்குவரத்து

தொகு

குவகாத்தியில் இருந்து மிர்சா வரைக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து இங்கு தனியார் வாகனங்களில் இயக்கப்படுகின்றன. இங்குள்ள அரசினர் விடுதியில் தங்கிக் கொள்ளலாம்.[3]

சான்றுகள்

தொகு
  1. "Chandubi Lake". mapsofindia.com. Archived from the original on 2013-01-29. பார்க்கப்பட்ட நாள் 2011-12-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Chandubi Lake Tourism". assamtribune.com. Archived from the original on 2012-07-18. பார்க்கப்பட்ட நாள் 2011-12-25.
  3. "Chandubi Lake - How to reach". assamspider.com. Archived from the original on 2012-11-01. பார்க்கப்பட்ட நாள் 2011-12-25.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாண்டுபி_ஏரி&oldid=3792189" இலிருந்து மீள்விக்கப்பட்டது