சாண்ட்பாங்சு மாகாணப் பூங்கா

சாண்ட்பாங்சு மாகாணப் பூங்கா (Sandbanks Provincial Park) அல்லது மணற்கரை மாகாணப் பூங்கா என்பது ஒன்ராறியோ ஏரிக் கரையில் அமைந்துள்ள ஒரு பூங்கா ஆகும். இது பிக்டன் ஒன்ராறியோவில் பிரின்சு எட்வேர்ட் கவுண்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது. மிக அழகான மணல் மேடுகளுக்காகவும் நீண்ட நீலக் கடற்கரைக்காகவும் புகழ்பெற்றது. உலகின் மிகப் பெரிய நன்னீர் மணல் வழியிடை (sand bar) மற்றும் மணல் மேட்டுத் தொகுதிகள் இங்கேயே உள்ளன.

சாண்ட்பாங்சு மாகாணப் பூங்கா

இந்தப் பூங்காவை ஒன்ராறியோ மாகாண அரசு நிர்வாகிக்கிறது. நீந்துதல், படகோட்டுதல், மகிழ்வுலாவுதல், முகாமிடல் எனப் பல்வேறு பொழுதுபோக்குச் செயற்பாடுகளுக்கென தனித் தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பூங்காவை நூறாயிரக்கணக்கான சுற்றாலாப் பயணிகள் ஆண்டுதோன்றும் பயன்படுத்துகிறார்கள்.

வெளி இணைப்புகள்

தொகு