சாதகாலங்காரம்

சாதகாலங்காரம் என்பது சோதிடம் சார்ந்த முக்கியமான மூலநூல்களில் ஒன்று. இது கீரனூர் நடராசன் என்பவரால் 17-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. சாலிவாகன சகாப்தம் 1587-இல் (கிபி 1665) நூல் அரங்கேறியதாக நூலின் பாயிரம் குறிப்பிடுகிறது.[1] ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்ட செய்யுள்களால் ஆனது இந்நூல். வடமொழியிலுள்ள பல சோதிட நூல்களை ஆதாரமாகக் கொண்டு இந்நூலைத் தாம் செய்துள்ளதாக ஆசிரியர் பாயிரத்தில் குறிப்பிடுகிறார்.[1] கீரனூர் நடராசன் ஞானப்பிரகாசன் என்பவரின் மாணாக்கர் ஆவார்.[1]

நூலின் அமைப்பு

தொகு

இந்நூல் பெரும்பாலும் விருத்தப் பாக்களால் ஆனது. இடையிடையே வெண்பா முதலிய வேறு சில பாக்களும் பயின்று வருகின்றன. ஒரு பெண்ணை நோக்கி சோதிடக் கருத்துகளைக் கூறுவது போல் மகடூஉ முன்னிலையாகப் பல பாடல்கள் உள்ளன. அந்தாதித் தொடை அமைப்பிலும் சில செய்யுள்கள் உள்ளன.

  • பாயிரப் படலம்
  • பாவகப் படலம்
  • கிரகசீலப் படலம்
  • ஜனன காலப் படலம்
  • பாலரிஷ்டப் படலம்
  • சந்திர திருஷ்டிப் படலம்
  • அங்கிசப் படலம்
  • சட்வர்க்கப் படலம்
  • உச்சபலப் படலம்
  • யோகபலப் படலம்
  • துவாதசப் பாவகப் படலம்
  • பெண்கள் ஜாதகப் படலம்
  • திசாபுத்திப் படலம்
  • அஷ்டவர்க்கப் படலம்

ஆகிய பகுதிகளாக நூல் அமைந்துள்ளது.

உரை நூல்கள்

தொகு

இந்நூலுக்குச் சில உரைநூல்கள் மூலப் பாடல்களுடன் வெளிவந்துள்ளன.

  • தெய்வசிகாமணி சோதிடர் என்பவர் இயற்றிய பழைய உரை பிரபலமானது. இது விரிவான உரை.
  • சாதகாலங்காரம் மூலமும் விசேட உரையும், யாழ்ப்பாணம் தமிழ்ப் பண்டிதரும் சோதிடருமான அம்பலவாணபிள்ளை என்பவரால் எழுதப்பட்டு 1930 இல் சென்னை வித்யாரத்நாகர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.[1]
  • சாதகாலங்காரம் மூலம், களத்தூர்த் தமிழ்ப் புலவர் ஆறுமுகமுதலியாரால் பரிசோதிக்கப்பட்டு கலாநிதி அச்சுக்கூடத்தில் வெளியிடப்பட்டது.[2]
  • கீரனூர் நடராஜன் இயற்றிய 'ஜாதக அலங்காரம்' (மூலமும் உரையும்), செ. தேவசேனாதிபதி என்பவரால் 2022 இல் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதகாலங்காரம்&oldid=3578532" இலிருந்து மீள்விக்கப்பட்டது