சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான் (நூல்)

சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான் நூல் [2] கிரண் பேடியின் திகார் சிறை சீர்திருத்த அனுபவங்களின் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. கவிதா பப்ளிகேஷன் இந்நூலை வெளியிட்டுள்ளது. மொழிபெயர்த்துள்ளவர் சிறந்த கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான சிற்பி பாலசுப்பிரமணியம்.

சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான்[1]
நூலாசிரியர்கிரண் பேடி I.P.S
உண்மையான தலைப்புIT IS ALWAYS POSSIBLE
மொழிபெயர்ப்பாளர்சிற்பி பாலசுப்பிரமணியம்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்கவிதா வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்
டிசம்பர் 2006
பக்கங்கள்528
ISBN81-8345-039-3

பல மாதங்களாக காலியாக இருந்த தில்லி சிறைத்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) ஆகப் பணியில் அமர்ந்தவர் கிரண் பேடி. பலரும் தவிர்க்கும் ’தண்டனைப் பதவி’யாகக் கருதப்பட்ட அப்பணியைப்[3]பொறுப்பேற்ற கிரண்பேடியின் ஆவணப்படுத்தப்பட்ட அனுபவங்கள் மற்றும் செய்திகளின் தொகுப்பாக, ஒரு பிரம்மாண்டமான மாற்றம் உருவான விதத்தை சொல்லும்படி உருவாக்கப்பட்ட நூல் இது.[1]

கொடிய குழுச்சண்டைகள், பயங்கரமான ஊழல், வன்முறை, போதைப்பொருள் நடமாட்டம் என்று நம்பிக்கைக்கு இடமேயில்லாத நரகக் குழியாகத் தோன்றிய திகார் சிறைக்கு [4]ஒரு போர் வீராங்கனையாகப் பொறுப்பேற்று ’நீங்கள் பிரார்த்தனை செய்வதுண்டா’ என்ற கேள்வியுடன் ஆரம்பித்து, பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தொண்டுடன் மனிதர்கள் நம்பிக்கையுடன் வாழக்கூடிய இடமாக அதை மாற்றியதுவரையான பல்வேறு கட்டங்கள், பிரச்சனைகள், எதிர்ப்புகள், சளைக்காத முயற்சிகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான்;கவிதா வெளியீடு
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-09-06.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-09-06.
  4. http://www.goodnewsindia.com/Pages/content/transitions/tihar.html