சாதியா இமாம்

பாகிஸ்தானிய நடிகை-மாடல்

சாதியா இமாம் என்பவர் ஒரு பாக்கித்தான் தொலைக்காட்சி நடிகையும், வடிவழகியும், தொகுப்பாளரும் ஆவார். இவர் பாகிஸ்தானின் பஞ்சாபிலுள்ள இராவல்பிண்டி என்னும் ஊரில் பிறந்தார்.[1] இவர் வியாபாரங்களிலும், நாடகங்களிலும், இசை காணொளிகளிலும் நடித்துள்ளார்.[2]

சாதியா இமாம்
(Sadia Imam)
பிறப்பு27 அக்டோபர் 1971 (1971-10-27) (அகவை 53)
இராவல்பிண்டி, பஞ்சாப், பாக்கிஸ்தான்
தேசியம்பாக்கித்தானியர்
பணிநடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், வடிவழகி
வாழ்க்கைத்
துணை
அட்னான் ஹைதர் (தி. 2013)
உறவினர்கள்அலியா இமாம்

தொழில்

தொகு

ஜப் ஜப் தில் மிலே, காலனி 52, டோரி, தபிச், அனோகா பந்தன், அங்கன் பார் சாந்தினி, கூஞ்ச் மற்றும் ஆஸ்மான் போன்ற பல பிரபலமான நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.[3][4]

இவர் தற்போது பாக்கித்தான் ஊடகங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒருவராக இருக்கின்றார். மிகவும் கவர்ச்சிகரமான  மாடல்களில் ஒருவராக கருதப்படும் சாதியா, ஒரு நல்ல நடிகையும் ஆவார். மை அவுர் தும் என்ற பிரபல தொலைக்காட்சி தொடரில் விருந்தினர் தோற்றத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தார். இவர் ஜெர்மனியிலிருந்து திரும்பிய பின்பு, கியோ தொலைக்காட்சியிலும், ஹம் தொலைக்காட்சியிலும் வரவிருக்கும் நாடக தொடர்களில் பணியாற்றத் தொடங்கினார். இவர் சமா தொலைக்காட்சியின் 'சமா கே மெஹ்மான்' நிகழ்ச்சிக்கு இவர் தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளார். பாக்கித்தானிலுள்ள பிரபலங்களை நேர்காணல்களும் செய்து வருகிறார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Profile of Sadia Imam". 1 September 2011. பார்க்கப்பட்ட நாள் 14 April 2022.
  2. "Sadia Imam: no proposal". 7 March 2010. https://www.dawn.com/news/859599/sadia-imam-no-proposal. 
  3. "Sadia Imam: no proposal". Dawn (newspaper). 7 March 2010. https://www.dawn.com/news/859599/sadia-imam-no-proposal. 
  4. 4.0 4.1 "Sadia Imam returns to small screen as a host after a long break". hipinpakistan.com website. 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 14 April 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதியா_இமாம்&oldid=3815034" இலிருந்து மீள்விக்கப்பட்டது