சாத்தி திருவிழா, ராயகடா

ஒடிசா மாநிலத்தில் ராயகடா மாவட்டத்தின் வருடாந்திர கலாச்சார திருவிழா

"சாத்தி திருவிழா" (Chaiti Festival) அல்லது "ராயகட மகோத்சவம்" என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ராயகடா மாவட்டத்தின் அதிகாரப்பூர்வமாக நடைபெறும் வருடாந்திர பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் கலாச்சார திருவிழா ஆகும்.[1][2] மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளில் ராயகடா சாய்தி திருவிழா ஒன்று.[3][4]

"சாத்தி திருவிழா"

ராயகட விழா

சாத்தி-2014
வகை ஒடியா
கொண்டாட்டங்கள் கலாச்சார நிகழ்ச்சிகள்
தொடக்கம் திசம்பர் 27ம் தேதி
முடிவடைகிறது திசம்பர் 29
அதிர்வெண் ஆண்டு

வரலாறு

தொகு

பழங்குடியினரின் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் 2005ஆம் ஆண்டு ராயகடா மாவட்டத்தில் இத்திருவிழா தொடங்கியது.[5] கலாச்சார விழா மாவட்ட அளவில் மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பிறபகுதிகளில் தொகுதி மட்டங்களிலும், துணை கோட்ட அளவிலும் கொண்டாடப்படுகிறது. முதல் சாத்தி திருவிழாவை, அப்போதைய மாவட்ட நீதிபதி முனைவர் பிரமோத் குமார் மெகர்தா பொதுமக்கள் பங்கேற்கும் விழாவாக ஏற்பாடு செய்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சாத்தி திருவிழா நடத்தப்படுகிறது. ஆனால் சில காரணங்களால் இந்த விழா 2008ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. பின்னர் 2009ஆம் ஆண்டில், மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியராக பணியாற்றிய கே. ஜி. மகாபத்ரா தொடர்ந்து திருவிழாவினை நடத்திட முயற்சி செய்து பாரம்பரிய விழாவினை மீட்டெடுத்தார்.[6]

கொண்டாட்டங்கள்

தொகு
 
சாத்தி திருவிழா, ராயகட

ராயகடாவின் மாவட்ட கலாச்சார குழு மூலம் வருடத்தின் கடைசி மூன்று நாட்களில் ஜி. சி. டி. உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் சாத்தி திருவிழா கொண்டாடப்படுகிறது.[7] நாடு முழுவதிலும்மிருந்து 500க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன், மாவட்டத்தின் சிறந்த பழங்குடியினரின் கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் களியாட்டங்களை நிகழ்த்துகின்றனர். இது திருவிழாவின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது.[8][9] ஒடிசா கிராமப்புற சந்தை மேம்பாடு குழுவின் சங்கத்தின் சார்பில் இந்த சாத்தி திருவிழாவைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. " telegraph India" News item in Telegraph India
  2. "Revolutionary frontlines" An article in Revolutionary Frontline
  3. "Orissa Review" பரணிடப்பட்டது சூலை 18, 2013 at the வந்தவழி இயந்திரம் official magazine of Govt. of Orissa
  4. "Rayagadaisfoundhere" Tourist attractions of Rayagada
  5. "Sambadepaper" பரணிடப்பட்டது 2015-01-01 at the வந்தவழி இயந்திரம் News item dtd. 27.12.2014
  6. "Rayagadanews" Blogspot on Rayagada News
  7. "Dailypioneer" Chaiti Festival at Rayagada
  8. "Dharitriepaper" பரணிடப்பட்டது 1 சனவரி 2015 at the வந்தவழி இயந்திரம் News item in Dharitriepaper dated 2712.2014
  9. "NewIndianexpress" Chaiti Festival Kicks off
  10. "ORMAS" பரணிடப்பட்டது திசம்பர் 17, 2006 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு

வார்ப்புரு:Odia culture

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தி_திருவிழா,_ராயகடா&oldid=3664376" இலிருந்து மீள்விக்கப்பட்டது