சாந்த சக்குபாய்

சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சாந்த சக்குபாய் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. சாரங்கபாணி, பி. சி. வெங்கடேஷ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சாந்த சக்குபாய்
இயக்கம்சுந்தராவ் நட்கர்ணி
தயாரிப்புராயல் டாக்கீஸ்
இசைதுறையூர் பாலகோபால சர்மா
நடிப்புகே. சாரங்கபாணி
பி. சி. வெங்கடேஷ்
கொத்தமங்கலம் சுப்பு
கொத்தமங்கலம் சீனு
கே. அசுவத்தம்மா
கே. அரங்கநாயகி
பணிபாய்
டி. எஸ். கிருஷ்ணவேணி
வெளியீடுஅக்டோபர் 22, 1939
ஓட்டம்.
நீளம்16500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிரபலமான மராத்திய நாட்டுப்புறக் கதை ஒன்றின் அடிப்படையில் இதன் திரைக்கதை எழுதப்பட்டது. முன்னணி கன்னட நடிகை அசுவத்தாமா இதில் கதாநாயகியாக நடித்தார். பாபநாசம் சிவன் எழுதிய பாடல்களுக்கு துறையூர் ராஜகோபால சர்மா இசையமைத்திருந்தார்.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்த_சக்குபாய்&oldid=3725784" இலிருந்து மீள்விக்கப்பட்டது