சானு சிவா
நேபாள அரசியல்வாதி
சானு சிவா (Sanu Siva) நேபாள நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். நேபாள பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த இவர் நேபாளத்தின் முதலாவது கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 2017 நேபாள பொதுத் தேர்தலில் சானு சிவா தலித் பிரிவில் இருந்து விகிதாசார பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
சானு சிவா Sanu Siva | |
---|---|
குடியரசுத் தலைவர் | வித்யா தேவி பண்டாரி |
பிரதமர் | கட்க பிரசாத் சர்மா ஒளி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | நேபாளம்i |
அரசியல் கட்சி | நேபாள பொதுவுடமைக் கட்சி |
சிறுநீரகம் மற்றும் இதயம் தொடர்பான உடல்நலக் கோளாறுகள் காரணமாக சானுசிவா 2020 ஆம் ஆண்டில் காட்மாண்டு மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்து போனார். மக்கள் கலாச்சாரக் கூட்டமைப்பின் மத்திய உறுப்பினராகவும் இருந்த இவர் 25 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Election Commission of Nepal
- ↑ "Lawmaker Sanu Shiva Pahadi passes away". Khabarhub. 2020-10-14. பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.