நேபாள பொதுவுடமைக் கட்சி

நேபாளத்தில் அரசியல் கட்சி

நேபாள பொதுவுடமைக் கட்சி (Nepal Communist Party - NCP), கட்க பிரசாத் சர்மா ஒளி தலைமையிலான மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மற்றும் பிரசந்தா தலைமையிலான மாவோயிஸ்ட் என இரண்டு பொதுவுடமைக் கட்சிகளும் காட்மாண்டு நகரத்தில் 17 மே 2018 அன்று (வியாழக்கிழமை) ஒன்றாக இணைந்ததன் மூலம் தோற்றுவிக்கப்பட்டது. [2][3] [4]

நேபாள பொதுவுடமைக் கட்சி
நேபாள பொதுவுடமைக் கட்சி
नेपाल कम्युनिष्ट पार्टी
சுருக்கக்குறிNCP (नेकपा)
தலைவர்கட்க பிரசாத் சர்மா ஒளி மற்றும் பிரசந்தா
பொதுச் செயலாளர்விஷ்ணு பிரசாத் பௌதெல்
Presidiumஆட்சி மன்றக் குழு
Spokespersonநாராயணன் கஜி சிரேஸ்தா
நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கட்க பிரசாத் சர்மா ஒளி[1]
தொடக்கம்17 மே 2018; 6 ஆண்டுகள் முன்னர் (2018-05-17)
இணைந்தவைமார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மற்றும் மாவோயிஸ்ட்
தலைமையகம்காட்மாண்டு, நேபாளம்
மாணவர் அமைப்புஅனைத்து நேபாள தேசிய மாணவர் ஒன்றியம்
இளைஞர் அமைப்புஅனைத்து நேபாள இளைஞர் அணி
அனைத்து நேபாள தொழிலாளர் அணிஅனைத்து நேபாள பொதுவுடமை தொழிலாளர்கள் சங்கம்
கொள்கைசோசலிசம்
அரசியல் நிலைப்பாடுமிதமான இடதுசாரி அரசியல்
நிறங்கள்     சிவப்பு
பிரதிநிதிகள் சபை (கீழவை)
174 / 275
தேசிய சபை (மேலவை)
42 / 59
தேர்தல் சின்னம்
Cpnuml-electionsymbol2064.PNG
கட்சிக்கொடி
இணையதளம்
www.cpnuml.org
www.cpnmc.org

புதிய கட்சியின் தேசியத் தலைவர்களாக நேபாள பிரதம அமைச்சர் கட்க பிரசாத் சர்மா ஒளி மற்றும் பிரசந்தா இருப்பர். புதிய நேபாள பொதுவுடமைக் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக கட்க பிரசாத் சர்மா ஒளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [5]

புதிய கட்சியில் பிரசந்தாவுக்கு அடுத்து மாதவ் குமார் நேபாள் மற்றும் சாலா நாத் கனால் ஆகியோர் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருப்பர்.

மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மற்றும் மாவோயிஸ்ட் கட்சிகளை கலைத்த பிறகு, புதிய நேபாள பொதுவுடமைக் கட்சியை, நேபாளத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கட்சியின் தொழிலாளர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி போன்ற அமைப்புகளின் நிர்வாகிகள் பின்னர் அறிவிக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.

மாநில, மாவட்ட, நகரங்கள் அளவிலான நிர்வாகிகள் பின்னர் அறிவிக்கப்படுவர்.

பின்னணி

தொகு

2017 நேபாள உள்ளாட்சி தேர்தலின் போது, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மற்றும் மாவோயிஸ்ட்களும், 60:40 விகிதத்தில் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்து, நேபாளி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும், நேபாளத் தேர்தல்கள் முடிந்தவுடன், 2018ல் இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைவது என்ற வாக்குறுதியுடன் 2017 நேபாள நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டது.

தேர்தல் முடிவில், நேபாள நாடாளுமன்றத்தின் மொத்த இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்ற இரு கட்சிகளும் சேர்ந்து நேபாளத்தில் கூட்டணி ஆட்சி அமைத்தது. அதே போன்று ஏழு 2017 மாநில சட்டமன்றங்களில், ஆறு மாநிலங்களில், இரண்டு பொதுவுடமைக் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்தது.

நேபாளத் தேர்தலில்மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் வேட்பாளர்களில் 70% வெற்றி பெற்றனர். ஆனால் மாவோயிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களில் 30% மட்டுமே வெற்றி பெற்றனர்.

முன்னதாக பிப்ரவரி 2018ல், இரு பொதுவுடமைக் கட்சிகளும் ஒன்றிணைவதான ஏழு அம்ச ஒப்பந்தத்தில் இரு கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

தேசிய அளவிலான கட்சிப் பதவிகள்

தொகு

ஆட்சி மன்றக்குழு (Secretariat)

தொகு

கட்சியின் முக்கியக் கொள்கை முடிவுகள் எடுக்க ஒன்பது பேர் கொண்ட ஆட்சி மன்றக் குழு நிறுவப்பட்டுள்ளது. [6][7]இந்த அரசியல் குழுவில் இடம் பெற்றவர்கள்:

நிலைக்குழு (Standing Committee)

தொகு

புதிய கட்சியின் 43 நிலைக்குழு உறுப்பினர்களில், 25 உறுப்பினர்கள் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியிலிருந்தும்; 18 உறுப்பினர்கள் மாவோயிஸ்ட் கட்சியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட முடிவானது.

மத்திய குழு உறுப்பினர்கள் (Central Committee)

தொகு

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட நேபாள பொதுவுடமைக் கட்சியின் 441 மத்திய குழு உறுப்பினர்களில் 241 உறுப்பினர்கள் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியிலிருந்தும்; 200 உறுப்பினர்கள் மாவோயிஸ்ட் கட்சியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட முடிவானது.[8]

கட்சியில் பிளவு

தொகு

நேபாளப் பிரதமர் கட்க பிரசாத் சர்மா ஒளி தலைமையிலான அமைச்சரவை நாடாளுமன்றத்தை கலைத்து விட நேபாளக் குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்தது. அதனை ஏற்ற குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி, நேபாள நாடாளுமன்றத்தை 22 டிசமபர் 2020 அன்று நாடாளுமன்றத்தை கலைத்து விட்டார்.[9] நாடாளுமன்றத்திற்கான தேர்தல் 2021- ஆம் ஆண்டு 30 ஏப்ரல் மற்றும் 10 மே நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என குடியரசுத் தலைவர் அறிவித்தார்.[10] சர்மா ஒளியின் செயலை கண்டித்த பிரசந்தா தலைமையிலான குழுவினர் 22 டிசம்பர் 2020 அன்று ஒன்று கூடி சர்மா ஒளியை கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக்கி வைத்த்ததுடன், கட்சியின் புதிய தலைவராக மாதவ் குமார் நேபாளை கடசியின் புதிய தலைவராக தேர்ந்தெடுத்து தீர்மானம் இயற்றினர்.[11][12]

அதே போன்று சர்மா ஒளி தலைமையிலான கட்சிக் குழுவினர் 22 டிசம்பர் 2020 அன்று தனியாக கூட்டம் நடத்தி பிரசந்தாவை கட்சியிலிருட்ந்து நீக்கி வைத்தனர். [13] இதனால் நேபாளப் பொதுவுடமைக் கட்சி இரண்டாக பிளவுபடும் நிலையில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. https://thehimalayantimes.com/kathmandu/ncp-picks-oli-as-its-parliamentary-party-leader/
  2. "Nepal's 2 major parties merge to form Nepal Communist Party". Archived from the original on 2020-11-09. பார்க்கப்பட்ட நாள் 2018-05-20.
  3. Merger of Communist Parties Marks a New Beginning in Nepal
  4. Nepal Left Parties Merger: How the Political Behemoth Came to Life
  5. NCP picks Oli as its PP leader
  6. UML-Maoist Centre merger: Nine-member committee to command unified party
  7. "एमाले र माओवादी मिलेर बन्यो नेपाल कम्युनिष्ट पार्टी". Online Khabar. https://www.onlinekhabar.com/2018/05/679859. 
  8. Nepal Communist Party will have 441-member Central Committee
  9. Nepal PM gets House dissolved, sparks protests
  10. [ HTTPS://WWW.THEHINDU.COM/NEWS/INTERNATIONAL/NEPAL-PM-OLI-RECOMMENDS-DISSOLUTION-OF-PARLIAMENT-AMIDST-POWER-TUSSLE/ARTICLE33377678.ECE Nepal set to face fresh election]
  11. Prachanda-led CPN removes Nepal PM Oli from party's chairman post
  12. Prachanda-led CPN removes PM Oli from party's chairman post
  13. {http://www.ptinews.com-www.ptinews.com/news/12054365_Nepal-s-ruling-party-appears-headed-for-split--Oli-forms-new-general-convention-committee.html[தொடர்பிழந்த இணைப்பு] Nepal's ruling party appears headed for split; Oli forms new general convention committee]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_பொதுவுடமைக்_கட்சி&oldid=3658788" இலிருந்து மீள்விக்கப்பட்டது