நேபாள உள்ளாட்சி தேர்தல், 2017

நேபாள உள்ளாட்சி தேர்தல், 2017 (Nepalese local elections, 2017) நேபாளத்தின் 7 மாநிலங்களில் உள்ள 6 மாநகராட்சிகள், 11 துணை-மாநகராட்சிகள், 276 நகர்புற நகராட்சிகள் மற்றும் 481 கிராமிய நகராட்சிகளுகளின் 763 மேயர்/தலைவர்கள், துணை மேயர்/துணைத் தலைவர்கள், 6,742 வார்டு தலைவர்கள் மற்றும் 26,790 வார்டு உறுப்பினர்களை வாக்காளர்களால் தேர்ந்தெடுக்க, 14 மே, 28 சூன், 18 செப்டம்பர் 2017 நாட்களில், மூன்று கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றது.[1] 2015ல் நேபாளத்திற்கான புதிய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, இருபது ஆண்டுகளுக்குப் பின், நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் ஆகும்.[2] [3]

தேர்வு முறை

தொகு

நகர்புற நகராட்சிகள் மற்றும் கிராமிய நகராட்சிகள் ஒரு மேயர்/தலைவர், ஒரு துணை மேயர்/துணைத் தலைவர், வார்டு தலைவர் மற்றும் நான்கு வார்டு உறுப்பினர்கள் கொண்டிருக்கும். நான்கு உறுப்பினர்களில் இரண்டு பெண் உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பதவிகளும் ஐந்தாண்டு காலம் மட்டுமே. வாக்காளர்களால் உள்ளாட்சி அமைப்புகளின் மேயர்/தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். பதிவான வாக்குகளில், செல்லத்தக்க வாக்குகளில் பெரும்பாலன வாக்குகள் பெற்றவரே வெற்றியாளர் என அறிவிக்கப்படுவர். [4]

உள்ளாட்சிகளின் வகை பதவிகள்
மாநகராட்சிகள் ஒரு மேயர், ஒரு துணை மேயர், ஒரு வார்டு தலைவர் மற்றும் நான்கு வார்டு உறுப்பினர்கள்
துணை மாநகராட்சிகள் ஒரு மேயர், ஒரு துணை மேயர், ஒரு வார்டு தலைவர் மற்றும் நான்கு வார்டு உறுப்பினர்கள்
நகர்புற நகராட்சிகள் ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், ஒரு வார்டு தலைவர் மற்றும் நான்கு வார்டு உறுப்பினர்கள்
கிராமிய நகராட்சிகள் ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், ஒரு வார்டு தலைவர் மற்றும் நான்கு வார்டு உறுப்பினர்கள்

தேர்தல் முடிவுகள்

தொகு
[உரை] – [தொகு]
அரசியல் கட்சிகள் மேயர்/தலைவர் துணை மேயர்/துணைத் தலைவர் வார்டு தலைவர் வார்டு உறுப்பினர்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் 294 331 2,560 10,912
நேபாளி காங்கிரஸ் 276 233 2,286 8,679
மாவோயிஸ்ட் மையம் 106 111 1,102 4,123
பெடரல் சோசலிஸ்ட் கட்சி 34 32 262 1,111
இராஷ்டிரிய ஜனதா கட்சி 25 30 195 862
நேபாள லோக்தந்திரிக் கட்சி 9 8 88 356
சுயேச்சைகள் 6 5 91 131
ராஷ்டிரிய பிரஜா தந்திர கட்சி 5 7 59 214
ராஷ்டிரிய ஜனமோர்ச்சா 3 4 33 146
நவ சக்தி கட்சி 2 1 22 91
நேபாளி ஜனதா தளம் 2 0 7 30
நேபாள உழைக்கும் விவசாயிகளின் கட்சி 1 1 22 75
பகுஜன் சக்தி கட்சி 0 0 8 34
ராஷ்டிரிய ஜனமுக்தி கட்சி 0 0 3 17
ராஷ்டிரிய பிரஜா தந்திர ஜனநாயக கட்சி 0 0 2 5
ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு 0 0 1 6
நேபாள பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய கூட்டு) 0 0 1 3
நேபாள பரிவார் தளம் 0 0 0 1
மொத்தம் 763 763 6,742 26,790

மாநிலங்கள் வாரியான முடிவுகள்

தொகு

7 மாநிலங்களில் நடைபெற்ற, 263 நகர்புற நகராட்சி அமைப்புகளில் உள்ள 763 மேயர்/தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் விவரம்: [5]

[உரை] – [தொகு]
கட்சிகள் மாநில எண் 1 மாநில எண் 2 மாநில எண் 3 மாநில எண் 4 மாநில எண் 5 மாநில எண் 6 மாநில எண் 7 மொத்தம்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி 69 18 64 34 43 27 39 294
நேபாளி காங்கிரஸ் 51 40 35 44 33 35 38 276
மாவோயிஸ்ட் மையம் 9 21 17 5 19 25 10 106
இராஷ்டிரிய ஜனதா கட்சி 24 24
பெடரல் சோசலிஸ்ட் கட்சி 1 27 3 31
நேபாள லோக்தந்திரிக் கட்சி 3 3 2 1 9
பிற கட்சிகள் 4 3 3 2 9 2 23
மொத்தம் 137 136 119 85 109 89 88 763

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Grassroots democracy". Nepali Times. Himal Media. பார்க்கப்பட்ட நாள் 12 May 2017.
  2. Koirala, Kosh Raj. "Local polls after 20 years, finally". My Republica. Nepal Republic Media. பார்க்கப்பட்ட நாள் 2 April 2017.
  3. "Local Election 2017 | Nepal - Overall Result". Archived from the original on 2017-12-11. பார்க்கப்பட்ட நாள் 2017-12-03.
  4. "हेर्नुहोस्, तपाईले भोट हाल्ने मतपत्र (नमूनासहित)". onlinekhabar.com. பார்க்கப்பட்ட நாள் 2 April 2017.
  5. "Local Election 2017 | Nepal - Overall Result". Archived from the original on 2017-12-11. பார்க்கப்பட்ட நாள் 2017-12-03.