சாபான் புகாரி
செய்யத் சாபான் புகாரி டெல்லியின் ஜாமா மஸ்ஜித்தின் துணை ஷாஹி இமாம் ஆவார். [1] [2] [3] [4] [5]
சாபான் புகாரி | |
---|---|
सैयद शाबान बुखारी | |
நைப் ஷாஹி இமாம் ஜாமா மஸ்ஜித், டெல்லி | |
நியமிப்பு | செய்யத் அகமது புகாரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | டெல்லி, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
துணைவர் | ஷாசியா புகாரி |
வாழிடம்(s) | டெல்லி, இந்தியா |
வேலை | துணை இமாம் ஜாமா மஸ்ஜித், டெல்லி |
புகாரி 1985 ஆம் ஆண்டு மார்ச் 11, அன்று இந்தியாவின் டெல்லியில் பிறந்தார். இவர் இஸ்லாமிய இறையியலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர், இவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் கடந்த 13 தலைமுறைகளாக இந்தியாவின் டெல்லி, பெரிய பள்ளிவாசல் “ ஜாமா மஸ்ஜித் ” க்கு தலைமை தாங்கி வருகின்றனர். ஜாமா மஸ்ஜித் 1656 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தாஜ்மஹாலை கட்டிய முகலாய பேரரசர் ஷாஜகான் தான் இந்த பள்ளிவாசலை கட்டினார். பேரரசர் ஷாஜகான் சையத் ஷாபன் புகாரியின் தாத்தாவான சையத் அப்துல் கபூர் ஷா புகாரியை ஜாமா மஸ்ஜித் முதல் இமாமாக நியமித்தார். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் ஜாமா மஸ்ஜித்க்கு இமாமாக நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
இந்த பாரம்பரியத்தை பின்பற்றும் வகையில் தான், 2014 ஆம் ஆண்டில், இந்தியாவின் டெல்லி, ஜாமா மஸ்ஜித்தின் துணை (நைப் ) ஷாஹி இமாமாக செய்யத் சாபான் புகாரி, இவரது தந்தை, 13வது ஷாஹி இமாம், மௌலானா சையத் அகமது புகாரி அவர்களால் நியமிக்கப்பட்டார்.
குறிப்புகள்
தொகு- ↑ "Shaban Bukhari anointed as Naib Imam of Jama Masjid". 23 November 2014.
- ↑ "सैयद शाबान बुखारी बने नायब शाही इमाम".
- ↑ "The Naib Imam, Shaban Bukhari during the anointment ceremony at Jama Masjid - Latest News & Updates at DNAIndia.com". 23 November 2014.
- ↑ "'We Held Post For 400 years, People Are With Us. Waqf board Has No Importance': Shahi Imam".
- ↑ "Jama Masjid Shahi Imam's Son Shaban Bukhari Anointed Naib Imam".