சாப்டூர் அழகாபுரி
அழகாபுரி தேவேந்திரகுல வேளாளர்(Alagapuri) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மேற்கு தொடரச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இது மதுரை மாவட்டம், சாப்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது[1]. இதை சாப்டூர் அழகாபுரி என்று அழைப்பார்கள்.
வரலாறு
தொகுசாப்டூர் அழகாபுரி 72 அங்கீகரிக்கப்பட்ட பழைய மதுரை பாளையங்களில் ஒன்று. இது தற்போதைய மதுரை மாவட்டத்தின் தே. கல்லுப்பட்டியில் இருந்து 19 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரானது 1859ல் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மதுரை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.இங்கு தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் வாழ்கின்றனர். இவர்களை குடும்பமார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இங்கு வசிக்கும் அனைத்து மக்களும் விவசாயம் செய்து வாழ்கின்றனர். இந்தக் கிராமத்தில் முற்றிலும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த மக்கள் மட்டுமே பங்குனி பொங்கல் திருவிழாவாக ஸ்ரீ சந்தன மாரியம்மன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் சித்திரை மாதத்தில் கள்ளழகர் பழையூரில் இருந்து சாப்டூர் மார்க்கமாக முதல் மரியாதை எஸ் அழகாபுரியை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கள்ளழகருக்கு தீர்த்தம் தொலைத்து முதல் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது ஆண்டுதோறும் இது தேவேந்திர குல வேளாளர் மக்களின் சிறப்பு
புவியியல் அமைப்பு
தொகு9.69oN 77.59 oE ல் இவ்வூர் அமைந்துள்ளது.
கோவில்கள்
தொகு- ஸ்ரீ முத்தாலம்மன் கோவில்
- ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில்
- ஸ்ரீ கள்ளழகர் கோவில்
- ஸ்ரீ பச்சை மலையப்பன் கோவில்
- கன்னிமார் சாமி கோயில்
- வேட்டை கருப்பண்ண சுவாமி கோயில்.
திருவிழாக்கள்
தொகுவருடத்தின் பங்குனி மாதம் வளர்பிறையில் இந்த பங்குனிப்பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது . இது, இக்கிராமத்தின் மிக முக்கியத் திருவிழா ஆகும். சந்தன மாரியம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழா நடைபெறும் பொழுது வெளியூரில் வசிக்கும் அழகாபுரி மக்கள் அழகாபுரிக்கு வந்து தங்கள் சொந்தங்களுடன் இணைந்து இத்திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். இந்த திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும்.அனைத்து விதமான நேர்த்திக் கடன்களும் இந்த மூன்று நாட்களில் கடா வெட்டுதல் முதல் நாளில் நடைபெறும் மேலும் அம்மனுக்குச் செலுத்தப்படும். முக்கியமான மூன்றாம் நாளன்று தங்கள் மாமன் முறை உறவினர் மேல் மஞ்சள் நீரை ஊற்றியும் மற்றும் வண்ணப்பொடிகளைத் தூவியும் தங்கள் மகிழ்ச்சியினை மக்கள் வெளிப்படுத்துவார்கள். சித்திரை மாதம் அழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்திற்கு இங்குள்ள தேவேந்திர குல மக்கள் அனைவரும் தீர்த்தம் எடுத்துக் கொண்டு அழகர் மீது தெளித்து முதல் மரியாதை வழங்கப்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
இங்கே விவசாயம் சார்ந்த தேவேந்திரகுல வேளாளர் மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்