சாமா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும். பண்டைய தமிழிசைப் பண்களில் ஆந்தாளிக்குறிஞ்சி என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1]

இலக்கணம்

தொகு
 
சாமா ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
 
சாமா அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), அந்தர காந்தாரம் (க3), சதுச்ருதி ரிசபம் (ரி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[2]:

ஆரோகணம்: ச ரி21 ப த2 ச்
அவரோகணம்: ச் த2 ப ம13 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ சாடவ" இராகம் எனப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. அ. கி. மூர்த்தி (1998). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 161.
  2. Music Handbook - Raga Index -S 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.

உசாத்துணைகள்

தொகு
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமா&oldid=3765641" இலிருந்து மீள்விக்கப்பட்டது