சாமிநாத விசய தேவர்

ராவ் பகதூர் சாமிநாத விசய தேவர் என்பவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாப்பா நாடு குறுநில மன்னர் ஆவார்.[1]

பாண்டித்துரைத் தேவர் அவர்கள் 1901 ஆம் ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தார். அதனை தொடர்ந்து, இவரும் 1902 ஆம் ஆண்டு தஞ்சையில் தமிழ் சங்கத்தை தோற்றுவித்தார். இத்தமிழ் சங்கத்தின் மூலம் தமிழகம் என்ற நூலும் வெளிவந்தது. இந்த சங்கம் ஏழு ஆண்டுகள் வரை இயங்கியது, பிறகு மறைந்து போயிற்று. 'தமிழகம்' என்ற நூலும் வெளிவராமல் நின்று போனது.[1][2]

அதன் பிறகு, தஞ்சாவூர் கருந்தட்டைக்குடியில் நிறுவப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குத் தேவையான நிதியுதவியுடன் மேலும் அதன் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தார்.[3]

ஆபிரகாம் பண்டிதர் முதன் முதலாக அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார். அதற்கான முழு பங்களிப்பையும் இவர் வழங்கினார்.[4]

இவருடைய மகன் ராஜப்பா விசய தேவர் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 நெஞ்சை அள்ளும் தஞ்சை. 1994. pp. [62].
  2. Umamaheshwaram. 2016.
  3. கரந்தைத் தமிழ்ச்சங்கம். 1917. pp. [3].
  4. Karunamirtha Sagaram On Srutis. 1917. pp. [238].
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமிநாத_விசய_தேவர்&oldid=3033541" இலிருந்து மீள்விக்கப்பட்டது