சாமுண்டி விரைவுவண்டி

சாமுண்டி விரைவுவண்டி (Chamundi Express) என்பது மைசூர் மற்றும் பெங்களூரு இடையே தினசரி இயக்கப்படும் தொடருந்து ஆகும். இந்த தொடருந்து மைசூரிலிருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு பெங்களூரு நகரை 9:30 மணிக்குச் சென்றடையும். மறு மார்க்கத்தில், பெங்களூரிலிருந்து மாலை 6:25 மணிக்குப் புறப்பட்டு இரவு 9:05 மணிக்கு மைசூர் சென்றடைகிறது.

சாமுண்டி எக்ஸ்பிரஸ் (மைசூர் - பெங்களூர்) பாதை வரைபடம்

கோவிட்-19 மறுசீரமைப்புக்குப் பிறகு, வழக்கமான பெட்டிகளுக்குப் பதிலாக மெமு சேவையினைப் பயன்படுத்தி தொடருந்து இயக்கப்படுகிறது.[1]

பெயரிடல்

தொகு

இந்த ரயிலின் பெயரானது புராண தொடர்புடையது. மகிசாசூரனை அழித்த ஆதி பராசக்தியின் அவதாரமே சாமுண்டேசுவரி. சாமுண்டேசுவரி மகிசாசூரனை வதம் செய்த இடமாகக் கருதப்படும் இடமான மைசூர் சாமுண்டி மலையில் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மைசூர் மகாராஜா மற்றும் மைசூர் அரச குடும்பம் சாமுண்டேசுவரியை தங்கள் குலதெய்வமாக வழிபட்டனர். தாட்சாயிணி தேவியின் தலைமுடி விழுந்ததால் இக்கோயில் சக்தி பீடமாகக் கருதப்படுகிறது

மேற்கோள்கள்

தொகு
  1. Jayashree. "16216/Chamundi Express - Bangalore to Mysore SWR/South Western Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமுண்டி_விரைவுவண்டி&oldid=3387939" இலிருந்து மீள்விக்கப்பட்டது