சாம்சேர் கான்

இந்திய முன்னாள் நீச்சல் வீர்ர்

சாம்சேர் கான் (Shamsher Khan) என்பவர் ஓர் இந்திய முன்னாள் நீச்சல் வீர்ர் ஆவார். இவர் 1933 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் குண்டுர் மாவட்டம் காயிதே பள்ளியில் பிறந்த இவர் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று இறந்தார்[1]. 1956 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கான் பங்குபெற்றார்[2][3]. 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் பட்டாம்பூச்சி வகை நீச்சல் போட்டியில் கான் தேசிய சாதனையை நிகழ்த்தினார். 1955 ஆம் ஆண்டு பெங்களுரில் நடைபெற்ற போட்டியில் தேசிய சாதனையாக இருந்த நேர சாதனையை கான் முறியடித்தார்.

தனிநபர் தகவல்
பிறப்பு1933
இந்தியா, ஆந்திரப் பிரதேசம், குண்டூர் மாவட்டம், காய்தே பள்ளி
இறப்பு2017 அக்டோபர் 15, 84 வயது
விளையாட்டு
விளையாட்டுநீச்சல்

சாம்சேர் கான் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்துள்ளார். 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீனப் போரிலும் 1971 இல் நடைபெற்ற இந்தியா- பாக்கித்தான் போரிலும் இவர் பங்கேற்றுள்ளார். 1973 ஆம் ஆண்டு இவர் ஒரு சுபேதார் என்ற இராணுவ வீர்ராக பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "First Indian Olympic swimmer Shamsher Khan dies of cardiac arrest - Times of India". பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
  2. Samdani, MN (27 July 2012). "Robbed: 1956 Swimming hero Shamsher of his Olympic feat". The Times of India. The Times of India. https://timesofindia.indiatimes.com/Robbed-1956-Swimming-hero-Shamsher-of-his-Olympic-feat/articleshow/15178332.cms. பார்த்த நாள்: 23 October 2013. 
  3. "Forgotten Olympian feted". 9 August 2009. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017 – via www.thehindu.com.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்சேர்_கான்&oldid=2691575" இலிருந்து மீள்விக்கப்பட்டது