சாம்பார் உப்பு ஏரி
சாம்பார் உப்பு ஏரி (Sambhar Salt Lake) என்பது இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டு உப்பு ஏரியாகும். இது இந்திய இராசத்தன் மாநில ஜெய்ப்புர் மாவட்டத்தில் சாம்பர் ஏரி நகரியத்தில் உள்ளது. இது ஜெய்ப்பூரில் இருந்து தென்மேற்காக 80 கிமீ தொலைவிலும் இராசத்தன் மாநில அஜ்மீர் நகரில் இருந்து வட கிழக்காக 64 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. I இதுவரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சாம்பார் ஏரி நகரியத்தைச் சுற்றி அமைகிறது.
சாம்பார் ஏரி Sambhar Lake | |
---|---|
சாம்பார் ஏரி வான்காட்சி, ஜெய்ப்பூர் மாவட்டம் | |
அமைவிடம் | சாம்பார் ஏரி நகரியம், ஜெய்ப்பூர் மாவட்டம்]], இராசத்தான், இந்தியா |
ஆள்கூறுகள் | 26°58′N 75°05′E / 26.967°N 75.083°E |
வகை | உப்பு ஏரி |
முதன்மை வெளியேற்றம் | உலூனி ஆறு |
வடிநிலப் பரப்பு | 5,700 km2 (2,200 sq mi) |
வடிநில நாடுகள் | இந்தியா |
பதவி | இராம்சார் சுற்றுலா இடம் |
அதிகபட்ச நீளம் | 35.5 km (22.1 mi) |
அதிகபட்ச அகலம் | 3 முதல் 11 km (1.9 முதல் 6.8 mi) |
மேற்பரப்பளவு | 190 முதல் 2,300 km2 (73 முதல் 888 sq mi) |
சராசரி ஆழம் | 0.6 முதல் 3 m (2.0 முதல் 9.8 அடி) |
அதிகபட்ச ஆழம் | 3 m (9.8 அடி) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 360 m (1,180 அடி) |
Invalid designation | |
தெரியப்பட்டது | 23 மார்ச்சு 1990 |
உசாவு எண் | 464[1] |
புவிப்பரப்பியல்
தொகுஇந்த ஏரி, மந்தா, உரூபன்கார், காரி, கந்தேலா, மேதா, சமூத் ஆகிய ஆறு ஆறுகளில் இருந்து தன்ணீரைப் பெறுகிறது. இதன் நீர்ப்பிடிப்புப் பரப்பு700 ச.கிமீ ஆகும்.[2] இது கங்கை ஆற்றின் கரையோரப் பகுதியின் பகுதியாக இல்லை, புவியியலாக ஒரு தனி நிலப்பகுதியாக அமைகிறது. [1] இந்த ஏரி உண்மையில் ஒரு அகல்விரிவான உப்புச் சதுப்புநிலம் ஆகும், வறண்ட பருவத்தில் சுமார் 60 செமீ (24 அங்குலம்) முதல் மழைக்காலத்திற்குப் பிறகு சுமார் 3 மீ(10 அடி) வரை நீரின் ஆழம் மாறுகிறது. இது பருவத்தைப் பொறுத்து 190 முதல் 230 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. இது 3 கிமீ முதல் 11 கிமீ வரை மாறும் அகலமும் 35.5 கிமீ நீளமும் கொண்ட நீள்வட்ட வடிவ ஏரி ஆகும். இது நாகவுர், ஜெய்ப்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ளது, இது அஜ்மீர் மாவட்டத்தை எல்லையாக கொண்டுள்ளது. ஏரி சுற்றளவு 96 கி.மீபிது ஆராவலி மலைத்தொடரால் சூழப்பட்டுள்ளது.
சாம்பார் ஏரிப் படுகை 5.1 கிமீ நீளமான மணற்பாறை மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. உப்பு நீர் ஒரு குறிப்பிட்ட செறிவு அடைந்தவுடன், மேற்குத் திசையில் அணைக் கதவுகளை உயர்த்துவதன் மூலம் கிழக்குப் பகுதியிலிருந்து விடுவிக்கப்படும். அணைக்கு கிழக்கே உப்பளங்கள்(உப்புநீர்ப் பாசனக் குளங்கள்) உள்ளன, அதில் உப்பு ஆயிரம் ஆண்டுகளாக தேக்கித் திரட்டப்படுகிறது. இந்தக் கிழக்கு பகுதி 80 ச.கிமீ பரப்புள்ளதாகும். உப்பு நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள், உப்பு மேடுகள்ஆகியன குறுகிய முகடுகளால் பிரிக்கப்படுகின்றன. அணைக்கு கிழக்கே சாம்பார் ஏரி நகரத்திலிருந்து உப்புச் செயல்பாடுகளுக்கு பிரித்தானிய அரசு (இந்தியாவின் விடுதலைக்கு முன்னால்) ஒரு தொடருந்துத் தடத்தை அமைத்தது.
அருகிலுள்ள விமான நிலையம் சங்கானர்; அருகிலுள்ள தொடருந்து நிலையம் சாம்பார் ஆகும். மந்தா, உரூபன்கர், கந்தேலா, காரி, மேதா, சமூதளாகிய ஆறுகளில் இருந்து நீரோடைகள் இந்த ஏரிக்குள் பாய்கின்றன. மந்தாவும் உரூபன்கரும் முதன்மையான நீரோடைகளாகும். மந்தா தெற்கு வடக்காகப் பாய்கிறது; உரூபன்கர் வடகிழக்காகப் பாய்கிறது.
கோடைகாலத்தில் வெப்பநிலை 40 செ வெப்பநிலைக்கு உயரும்; குளிர்காலத்தில் 11 செ வெப்பநிலைக்குத் தாழும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sambhar Lake". Ramsar Sites Information Service. Archived from the original on 10 May 2018. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
- ↑ "River basins with Major and medium dams & barrages location map in India, WRIS". பார்க்கப்பட்ட நாள் 10 May 2014.