சம்பா அரசு, வியட்நாமின் அனாம்(மத்திய வியட்நாம்) மற்றும் கோகொச்சின்(தென் வியட்நாம்) பகுதியில் அரசாண்ட தமிழர் வழி வந்த அரச வம்சம் ஆகும்.சாம்ப அரசு கடல் சார்ந்த அரசாகும்.சாம்ப மக்கள் வாணிபம் மூலம் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள். இவர்கள் முதல் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை அரசாண்டனர்.இவர்கள் சீனர்களுடண் வாணிப உறவு கொண்டு இருந்தனர்.சீன அரசு பல முறை படையெடுத்தும் உள்ளது.

தொடக்கம் தொகு

சாம்ப அரசு ஆதியில் நாக இன மக்களால் ஆளப்பட்டு வந்தது. மாறன் என்ற பாண்டிய இளவரசன் நாக இளவரசியை மணந்து முதல் சாம்ப அரசர் ஆனான்.ஆரம்பத்தில் கம்போசத்தின் புன்னன் அரசுடண் கொண்ட நட்பால் இந்திய கலாச்சாரம் பரவியது.

வரலாறு தொகு

பத்ரவர்மன கிபி300ல் ஏற்ப்பட்ட சீன ஆதிக்கத்தை கிபி 380ல் அகற்றி மீண்டும் சாம்ப அரசை நிறுவினார்.இவர் தலைநகராக சிம்மபுரியை உருவாக்கினார்.பத்ரவர்மன சிம்மபுரியில் சிவாலயம்(மீசோன் ஆலயம்) எழுப்பி அங்குள்ள சிவனுக்கு பத்ரேஸ்வரர் என பெயரிட்டான். கிபி 420ல் மனோரதவர்மன் காலத்தில் மீண்டும் சீன ஆதிக்கம் ஏற்ப்பட்டது இதை கிபி 510ல் தேவவர்மன் நீக்கினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்ப_அரசு&oldid=3523882" இலிருந்து மீள்விக்கப்பட்டது