சாய் டைம் அட் சின்னமன் கார்டன்ஸ்

சங்கரி சந்திரனின் 2023 ஆங்கில புதினம்

சாய் டைம் அட் சின்னமன் கார்டன்ஸ் (Chai Time at Cinnamon Gardens) என்பது ஆத்திரேலிய எழுத்தாளர் சங்கரி சந்திரன் எழுதிய ஆங்கிலப் புதினமாகும். இது [1] 2022 இல் ஆத்திரேலியாவில் அல்டிமோ பிரஸ் மூலம் வெளியிடப்பட்டது.

சாய் டைம் அட் சின்னமன் கார்டன்ஸ்
Chai Time at Cinnamon Gardens
நூலாசிரியர்சங்கரி சந்திரன்
நாடுஆத்திரேலியா
மொழிஆங்கிலம்
வகைகதை
வெளியீட்டாளர்அல்டிமோ பிரஸ்
வெளியிடப்பட்ட நாள்
2022
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்384 pp.
விருதுகள்மைல்ஸ் பிராங்க்ளின் விருது, 2023
ISBN9781761150319
முன்னைய நூல்The Barrier

இது 2023 மைல்ஸ் பிராங்க்ளின் விருதைப் பெற்றது. [2]

சுருக்கம் தொகு

சின்னமன் கார்டன் என்பது சிட்னியில் உள்ள ஒரு முதியோர் இல்லமாகும். இது 1980 களில் இலங்கை உள்நாட்டுப் போரின் போது நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை தம்பதிகளான மாயா, சாகிர் ஆகியோரால் அமைக்கப்பட்டதாகும். ஒரு கட்டத்தில் சாகிர் காணமல் போகிறார். அதன்பிறகு மாயா அவரது மகள் அஞ்சலியால் ஏற்று நடத்தப்படும் முதியோர் இல்லத்தில் வசிக்கிறார். ஆத்திரேலியாவுக்கு முதன்முறை வந்து இறங்கியவர் என்று போற்றப்படும் ஜேம்ஸ் குக்கின் சிலை சாகிரும், மாயாவும் நடத்திய முதியோர் இல்லத்தில் முன்னர் இருந்துள்ளது. அந்தச் சிலையை ஒருநாள் மாயாவும் ஜாகிரும் இடித்துத் தள்ளுகின்றனர். அதை அஞ்சலியின் நண்பர் கண்டறிந்ததும், அந்த இணையர் மீது இனவெறி குற்றம் சாட்டி மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கிறார்.

புதினமானது இன்றைய காலகட்டம்; மற்றும் 1980களில் இலங்கை காலகட்டம் என இரண்டு காலக்கோடுகளில் சொல்லப்படுகிறது.

அர்ப்பணிப்பு தொகு

  • "எல்லோரா, கைலாஷ், ஹரி, சித்தார்த்துக்கு"

விமர்சன வரவேற்பு தொகு

இந்து தமிழ் திசையில் தெய்வீகன் எழுதுகையில் "ஆஸ்திரேலியாவின் நிறவாத அரசியலை, இலங்கையின் இனவாத அரசியலுடன் சமாந்திரப்படுத்தி விரித்துச் செல்லும் இந்த நாவல், வரலாற்று ரீதியாக ஆஸ்திரேலியப் பூர்வக மக்கள் முகங்கொடுத்த பேரலங்களைத்தான் சிறீலங்காவில் தமிழர்களும் எண்பதுகள் முதல் அனுபவித்து உள்ளதாக சங்கரி, உண்மைச் சம்பவங்களோடு பாத்திரங்களைக் கோத்துச் சொல்கிறார். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான வரலாறுடைய ஆஸ்திரேலியாவைப் பின்தள்ளிவிட்டு ஆஸ்திரேலியாவின் வரலாறு என்பது கேப்டன் குக் வந்து இறங்கிய காலத்துடன் ஆரம்பிப்பது என்று புனைந்து, வரலாற்றின் மீது நின்று பொய்யுரைக்கும் நவ-ஆஸ்திரேலியச் சிந்தனையில் கிடக்கின்ற அதே கேவலத்தைத்தான், மஹாவம்சத்திலிருந்து இலங்கை வரலாறு தோன்றியதாக இலங்கை அரசாங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றது என்று தனது பூர்வீக நிலத்தினதும் புகலிட தேசத்தினதும் வரலாற்றுப் பெருங்குற்றத்திற்கான ஒருபுள்ளியில் இணைத்திருக்கிறார்"[3]

விருதுகள் தொகு

  • மைல்ஸ் பிராங்க்ளின் இலக்கிய விருது, 2023. [2]

குறிப்புகள் தொகு

  • Jason Steger, of The Sydney Morning Herald, interviewed the author about the book after it was awarded the Miles Franklin Award.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Austlit — Chai Time at Cinnamon Gardens by Shankari Chandran (Ultimo Press) 2022". Austlit. பார்க்கப்பட்ட நாள் 12 January 2024.
  2. 2.0 2.1 "Shankari Chandran wins 2023 Miles Franklin award for Chai Time at Cinnamon Gardens". https://www.theguardian.com/books/2023/jul/25/miles-franklin-award-2023-winners-shankari-chandran-chai-time-cinnamon-gardens. பார்த்த நாள்: 2023-07-25. 
  3. "தமிழ்க் குடும்பம்வழி கேள்விக்கு உள்ளாகும் ஆஸ்திரேலிய அரசியல்". இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2024.
  4. ""'Trojan horse' novel tackling colonisation and war wins Miles Franklin"". The Sydney Morning Herald, 25 July 2023. பார்க்கப்பட்ட நாள் 12 January 2024.