ஈழப் போர்

இலங்கை உள்நாட்டு போர்
(இலங்கை உள்நாட்டுப் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் (Sri Lankan Civil War) என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். 23 யூலை 1983 முதல் 26 ஆண்டுகள் நடைபெற்ற இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.[1]

இலங்கை உள்நாட்டுப் போர்
Sri Lanka-CIA WFB Map.png
இலங்கைத் தீவு
நாள் 23 சூலை 1983 – 18 மே 2009[1]
(25 ஆண்டு-கள், 9 மாதம்-கள், 3 வாரம்-கள் and 4 நாள்-கள்)
இடம் இலங்கை
இலங்கை அரச வெற்றி
 • தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க செயற்பாடு இலங்கையில் இல்லாது போனது
 • இலங்கை அரசாங்கம் நாட்டின் முழுப்பகுதியையும் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தனர்
நிலப்பகுதி
மாற்றங்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் 2002 - 2008 வரையான காலப்பகுதியில் வடக்கில் பெரும் பகுதியையும் கிழக்கில் அரைவாசிப் பகுதியையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 2009 மேயில் முழுப்பகுதியும் அரச கட்டுப்பாட்டிற்கு வந்தது.
பிரிவினர்
இலங்கை இலங்கை இராணுவம் Tamil Eelam Flag.svgதமிழீழ விடுதலைப் புலிகள்
ஈழ இயக்கங்கள்
இந்தியா இந்திய அமைதி காக்கும் படை (1987–90)
தளபதிகள், தலைவர்கள்
இலங்கை ஜே.ஆர். (1983–89)

இலங்கைஆர்.பிரேமதாசா (1989-93) 
இலங்கைடி.பி.விஜதுங்கா (1993-94)
இலங்கைச.ப.குமாரதுங்கா (1994-2005)
இலங்கைமகிந்த ராஜபக்ச (2005-2009)

Tamil Eelam Flag.svgவே. பிரபாகரன் (1983-2009) 

Tamil Eelam Flag.svg செல்வராசா பத்மநாதன் (2009) (கைதி)

இந்தியா ரா. வெங்கட்ராமன் (1987–90)

இந்தியா ராஜீவ் காந்தி (1987–89) 
இந்தியா வி. பி. சிங் (1989–90)

பலம்
இலங்கை இலங்கை ஆயுதப்படைகள்:
95,000 (2001)
118,000 (2002)
158,000 (2003)
151,000 (2004)
111,000 (2005)
150,900 (2006)[2]
Tamil Eelam Flag.svgதமிழீழ விடுதலைப் புலிகள்
(துணைப்படைகள் தவிர்த்து):
6,000 (2001)
7,000 (2003)
11,000 (2005)
8,000 (2006)
15,000 (2007)[2][3]
(துணைப்படைகள் உட்பட):
25,000 (2006)
30,000 (2008)[4]
இந்தியா இந்திய அமைதி காக்கும் படை:
100,000 (உச்சம்)
இழப்புகள்
28,708-32,000 சாவு
5000+ காணவில்லை
60,000+ காயம்(இராணுவம், காவற் துறை)[5][6][7]
27,000 விடுதலைப் புலிகள் மற்றும் ஈழ இயக்கங்கள்[8][9][10][11]
11,644 விடுதலைப் புலிகள் பிடிபட்டனர்[12]
1,200 சாவு
(இந்திய அமைதி காக்கும் படை)[13]
100,000+ பொதுமக்கள் சாவு (கணக்கீடு)[14]

27 வருடங்களுக்கு மேலாக இப் போராட்டம் இலங்கை மக்களுக்கு கடும் துன்பத்தையும், சூழல், பொருளாதார ரீதியாக நாட்டிற்கு இழப்பையும் ஏற்படுத்தி 80,000–100,000 க்கு மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் காரணமாகியது.[14] போரின் ஆரம்ப காலத்தில் இலங்கைப் படைகள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீளவும் கைப்பற்ற முனைந்தனர். அரசுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட உத்திகள் தடையாக இருந்தாலும், புலிகளை அமெரிக்கா, இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட் 32 நாடுகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டனர். இலங்கை அரச படைகள் திட்டமிட்ட மோசமான மனித உரிமை மீறல், பலவந்தமாக காணாமல் போதல், நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் என்பவற்றுக்காக குற்றம் சாட்டப்பட்டனர்.[15]

இரு தசாப்தங்களாக போர் மற்றும் தோல்வியுற்ற நான்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள், மற்றும் 1987 - 1990 காலப்பகுதியில் இலங்கையில் நிலை கொண்ட இந்தியப் படைகளின் தோல்வியில் முடிந்த பிரசன்னம் என்பவற்றின் பின் மார்கழி 2001 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு, சர்வதேச மத்தியஸ்துடன் போர் நிறுத்தம் 2002 இல் மேற்கொள்ளப்பட்டது.[16] ஆயினும், 2005 பிற்பகுதியில் முரண்பாடு ஆரம்பமாகி, பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யூலை 2006 இல் அரசு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் புலிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டது.[17][18]

2007 இல் அரசாங்கம் தாக்குதலை வடபகுதிக்கு மாற்றி, 10,000 க்கு மேற்பட்ட தடவைகள் புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறியதாக குற்றச்சாட்டி ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது.[19] இதன் மூலம் புலிகளின் தங்கள் தலைமைச் செயற்பாட்டிடமாக கொண்டிருந்த கிளிநொச்சி, பிரதான இராணுவ மையமாக இருந்த முல்லைத்தீவு, முழு ஏ9 நெடுஞ்சாலை ஆகிய இடங்களைக் கைப்பற்றி,[20] தமிழீழ விடுதலைப் புலிகள் 17 மே 2009 அன்று தோல்வியுற்றனர்.[21] இதன் பின்னர் ஐ.நா.வினால் இலங்கை அரசும் புலிகளும் போர்க் குற்றம் புரிந்ததாக குற்றஞ் சாட்டப்பட்டனர். இதற்கான பதில் கூறலில் விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இலங்கை அரசு நெருக்கடிகளுக்கு உட்பட்டு வருகின்றது.

ஈழப்போருக்கான காரணங்களும் அதன் வளர்ச்சியும்தொகு

ஈழப்போருக்கான காரணங்களும் தற்போதைய நிலைமையும்தொகு

ஈழப்போருக்கான காரணங்களும் தற்போதைய நிலைமையும்
காரணம் தற்போதைய நிலைமை
தனிச் சிங்களச் சட்டம் - (Official Language Act, No. 33 of 1956 [1]) தமிழ் மொழி, சிங்கள மொழி இரண்டும் அரச மொழிகள்; ஆங்கிலம் இணைப்பு மொழி (13th Amedment, 14th November, 1987 [2]). நடைமுறையில் பல இடங்களில் தமிழர்கள் காவல், நீதித் துறை உட்பட அனேக அரச சேவைகளை தமிழில் பெறுவது அரிது. தமிழ் கல்வி புத்தகங்கள் பல பிழைகளுடன் அச்சாகின்றன. தமிழ் மொழி சிதைத்துப் பயன்படுத்தப்படுகின்றது. Sri Lanka's 'Tamil implementation'
பௌத்தம் அரச சமயம் ஆக முதன்மைப்படுத்தப்படல். இந்த நிலைமையில் மாற்றம் இல்லை. நடைமுறையில் பிற சமயத்தவர் தமது சமயத்தை பின்பற்றுவதில், பாதுகாப்பதில், மேம்படுத்துவதில் எந்தவித தடை இல்லையென்றாலும், இது சமமற்ற உரிமை பெற்ற குடியுருமை என்ற தோற்றப்பாட்டையும் அதன் அரசியல்-சட்ட வடிவகத்தையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. மேலும் சமயமும் அரசும் பிரிந்து இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை இது சற்றும் பொருட்படுத்தவில்லை.
இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பெரும் தொகை தகுதி திறமை பெற்ற தமிழ் மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பை இந்த சட்டம் இல்லாமல் செய்தது. இவ்வாறு கல்வியில் தரம் குறைக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் தற்போது இந்த சட்டத்தாலேயே உயர்கல்வியில் இடம் பெறும் அவல நிலை இன்று உள்ளது.
தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் தொடர்ந்து நடக்கின்றது.
தனிமனித உரிமைகள், இனக் குழுக்களின் உரிமைகள் உறுதி செய்யப்படாமை, பாதுகாக்கப்படாமை. தொடர்ந்து நடக்கின்றது.
சிங்களமயமாக்கம் தொடர்ந்து நடக்கின்றது
வேலைவாய்ப்பில் இனத்துவேசம் (இலங்கை) தொடர்ந்து நடக்கின்றது
இலங்கை அரச பயங்கரவாதம் தொடர்ந்து நடக்கின்றது
இலங்கை அரசின் சிங்களப் பேரினவாதம் தொடர்ந்து நடக்கின்றது

முன்னேற்றம்தொகு

இலங்கையில் 14.11.2013 அன்று நடந்த காமன்வெல்த் மாநாட்டைத் தொடர்ந்து [22] 1983ம் ஆண்டு துவங்கி மே மாதம் 2009ம் ஆண்டு வரையில் 30 ஆண்டுகாலம் நடந்த போரில் உயிர் இழப்பு, உடல் ஊனம், காணாமல் போனவர்களின் பட்டியல் போன்ற கணக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க முதன் முறையாக இலங்கை அரசு ஒத்துக்கொண்டுள்ளது.[23]

இவற்றையும் பார்க்கதொகு


ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலக எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 "LTTE defeated; Sri Lanka liberated from terror". Ministry of Defence. 18 May 2009. Archived from the original on 21 மே 2009. https://web.archive.org/web/20090521113622/http://www.defence.lk/new.asp?fname=20090518_10. பார்த்த நாள்: 18 May 2009. 
 2. 2.0 2.1 International Institute for Strategic Studies, Armed Conflicts Database.
 3. Opposition leader rebutts [sic] Sri Lankan government claims.
 4. "Humanitarian Operation – Factual Analysis, July 2006 – May 2009" (PDF). Ministry of Defence (Sri Lanka). 1 August 2011. 4 மார்ச் 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 14 ஏப்ரல் 2013 அன்று பார்க்கப்பட்டது.
 5. (PDF) Psychological Management of Combat Stress—A Study Based on Sri Lankan Combatants. Archived from the original on 13 டிசம்பர் 2006. https://web.archive.org/web/20061213094157/http://mailer.fsu.edu/~cfigley/vets/documents/PsychologicalManagementofCombatStress_SriLanka.pdf. பார்த்த நாள்: 20 ஏப்ரல் 2008. 
 6. "Sri Lanka Assessment 2007". Satp.org. 28 டிசம்பர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 May 2009 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Sri Lankan army deaths revealed". BBC News. 22 May 2009. http://news.bbc.co.uk/2/hi/south_asia/8062922.stm. பார்த்த நாள்: 9 ஏப்ரல் 2010. 
 8. "Sri Lanka Database – Casualties of Terrorist violence in Sri Lanka". Satp.org. 3 ஜூன் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 May 2009 அன்று பார்க்கப்பட்டது.
 9. Eelam War IV: Imminent End பரணிடப்பட்டது 2017-10-12 at the வந்தவழி இயந்திரம்.
 10. Tamils mark 25-years of Tiger sacrifice Tamilnet.
 11. 4073 LTTE cadres killed in ongoing battle.
 12. "Sri Lankan experience proves nothing is impossible". The Sunday Observer. 5 June 2011. 8 ஜூன் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
 13. Nakkawita, Wijitha (3 June 2009). "LTTE killing spree". Daily News (Sri Lanka). Archived from the original on 11 ஜனவரி 2013. https://archive.is/20130111232336/http://www.dailynews.lk/2009/06/03/fea12.asp. பார்த்த நாள்: 29 ஏப்ரல் 2012. 
 14. 14.0 14.1 "Up to 100,000 killed in Sri Lanka's civil war: UN". ABC Australia. 20 May 2009. http://www.abc.net.au/news/stories/2009/05/20/2576543.htm. 
 15. "International Commission of Jurists Submission to the Universal Periodic Review of Sri Lanka" (PDF). International Commission of Jurists. ஏப்ரல் 2012. 26 July 2012 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
 16. "Ceasefire raises Sri Lankan peace hopes". The Guardian (London). 22 February 2002. http://www.guardian.co.uk/international/story/0,3604,655451,00.html. பார்த்த நாள்: 9 ஏப்ரல் 2010. 
 17. "Sri Lanka's war seen far from over". Amal Jayasinghe. Agence France-Presse. 14 July 2007. http://washingtontimes.com/apps/pbcs.dll/article?AID=/20070714/FOREIGN/107140037/1003. 
 18. "Sri Lankan Government Finds Support From Buddhist Monks". The New York Times. 25 February 2007. http://www.nytimes.com/2007/02/25/world/asia/25lanka.html?pagewanted=1. 
 19. "Government takes policy decision to abrogate failed CFA". Ministry of Defence. 2 January 2008. Archived from the original on 5 ஜனவரி 2008. https://web.archive.org/web/20080105051601/http://www.defence.lk/new.asp?fname=20080102_12. பார்த்த நாள்: 2 January 2008. 
 20. Sri Lankan Forces Capture Last Major Rebel Base in Northeast, Bloomberg.
 21. From correspondents in Colombo (17 May 2009). "Tamil Tigers admit defeat in civil war after 37-year battle". News.com.au. Archived from the original on 19 மே 2009. https://web.archive.org/web/20090519011848/http://www.news.com.au/story/0,27574,25496902-401,00.html. பார்த்த நாள்: 17 May 2009. 
 22. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-11-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-29 அன்று பார்க்கப்பட்டது.
 23. இறந்தோரை கணக்கெடுக்க தொடங்கியது இலங்கை அரசு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழப்_போர்&oldid=3723723" இருந்து மீள்விக்கப்பட்டது