மூன்றாம் ஈழப்போர்
மூன்றாம் ஈழப்போர் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற ஈழப்போரின் மூன்றாம் நிலையாகும். 100 நாட்கள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு 1995, ஏப்ரல், 19 அன்று போர் வெடித்தது. கடற்புலிகள் "சூரயா", "ரணசுரு" ஆகிய கடற்படையினரின் கடற்கலங்களை மூழ்கடித்தனர். மேலும், விடுதலைப் புலிகள் தோளில் வைத்து செலுத்தக்கூடிய "ஸ்ரிங்கர்" விமான எதிர்ப்பு ஏவுகணைகளை புதிதாக போரில் பாவித்தனர். இதன் மூலம் இலங்கை விமானப்படையின் இரு "அவ்ரோ" (AVRO) விமானங்கள் யாழ் தீபகற்பத்தின் மேலாகப் பறக்கும்போது சுட்டு வீழ்த்தப்பட்டன.[1][2][3]
மூன்றாம் ஈழப்போர் Eelam War III |
|||||||
---|---|---|---|---|---|---|---|
ஈழப்போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இலங்கை இராணுவம் | தமிழீழ விடுதலைப் புலிகள் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
சந்திரிக்கா குமாரதுங்க (1994–2005) | வேலுப்பிள்ளை பிரபாகரன் | ||||||
பலம் | |||||||
247,000 | 18,000-24,000 | ||||||
இழப்புகள் | |||||||
7,838 | 2,876 |
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற முக்கிய மாவட்டங்களை கைப்பற்றி ஆனையிறவு தளத்தை கைப்பற்றியதன் மூலம் மூன்றாம் ஈழப்போர் புலிகளின் எழுச்சிமிக்க வெற்றியையும் குறிக்கின்றது. இதையடுத்து யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் புலிகள் ஓயாத அலைகள் நடவடிக்கை நான்கைத் துவக்கினர்.
மூன்றாம் ஈழப் போரின் முடிவில், விடுதலைப் புலிகள் இலங்கைத் தீவின் 30% பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர்.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ The Tamil Tigers inflicted heavier casualties to the Sri Lankan Army despite being outnumbered 10 times. They also conquered large chunks of territory in 2000-2002.
- ↑ "Sri Lanka Human Rights Practices, 1995". U.S. Department of State. Archived from the original on September 24, 2003.
- ↑ Ltd., Information Laboratories (Pvt.). "The Sunday Times News and Comments". sundaytimes.lk. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.