ஈழப்போரில் இந்தியாவின் பங்கு

(ஈழப்போரில் இந்தியாவின் தலையீடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஈழப்போரில் இந்தியா பல கால கட்டங்களில் பல்வேறு வியூகங்களுடன் பங்கெடுத்துள்ளது. இந்திய நடுவண் அரசின் நலங்களைப் பேணுவதற்காக தானாகவும், தமிழர் தரப்பு அல்லது அரச தரப்புக் கோரியமையாலும் ஈழப் போரில் பங்கெடுத்துள்ளது.

ஈழப்போரில் இந்தியா
ஈழப் போர் பகுதி
நாள் 1987 – 24 மார்ச் 1990
இடம் இலங்கை
இலங்கையிலிருந்து இந்திய அமைதி காக்கும் படை வெளியேறல், ஈழப்போர் தொடர்தல், விடுதலைப் புலிகளினதும் இலங்கை அரசினதும் தந்திரோபாய வெற்றி.
பிரிவினர்
இந்தியா இந்திய அமைதி காக்கும் படை
 இலங்கை
தமிழீழம் தமிழீழ விடுதலைப் புலிகள் (த.ஈ.வி.பு.)
தளபதிகள், தலைவர்கள்
இந்தியா ரா. வெங்கட்ராமன்
இந்தியா ராஜீவ் காந்தி
இந்தியா வி. பி. சிங்
இந்தியா மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்
இந்தியா மேஜர் ஜெனரல் அசோக் கே. மேத்தா
தமிழீழம்வேலுப்பிள்ளை பிரபாகரன்
இழப்புகள்
இந்தியப்படை: 1,165+ இறப்புகள், 3009 காயம்[1] த.ஈ.வி.பு: 632 இறப்புகள்[2]

ஈழ இயக்கங்களுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்கி இந்தியா, ஈழப் போராட்டத்தை ஆயுதப் போர் ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்தது. பின்னர் ஈழத்தில் ஆயுதக் குழுக்களை அழிக்க உதவியது இந்தியா, ஈழத்தமிழர்களின் உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது, கண்டித்தது ஈழத்து அகதிகளில் பெருந்தொகையினரை ஏற்றுக் கொண்டது, ஈழத்தில் அமைதிப் படை என்னும் பெயரில் இந்தியப் படையை அனுப்பியது,[3] அமைதிப் படை ஈழப் போராளிகளுக்கு எதிராகப் போரிட்டது, ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு போர் குற்றங்களில் ஈடுபட்டது,[3] ஈழப் போரின் பின்பான செயற்பாடுகள் என பல்வேறு வழிகளில் இந்திய அரசு ஈழப்போரிலும் ஈழப்போராட்டத்திலும் பங்கெடுத்து வருகிறது.

ஈழப்போரில் இந்தியா: 1987–1990

தொகு

ஈழப்போரில் இந்தியாவின் தலையீடு இலங்கையில் அமைதி காக்கும் பணியில் அமர்த்த இந்திய அமைதி காக்கும் படை அனுப்பியதால் ஏற்பட்ட போர் மற்றும் பிற நிகழ்வுகளைக் குறிக்கும். இலங்கை ஆயுதப் படைகளுக்கும் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் (குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்) இடையே நடந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர 1987 ஆம் ஆண்டில் நடந்த இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இந்திய அமைதி காக்கும் படை இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்திய அமைதி காக்கும் படை[3]

தொகு

பொதுமக்களின் மேல் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள்

தொகு
எண் காலமும் இடமும் கொலைகள் பற்றிய தகவல்கள்
1 14 ஆகத்து 1989, வல்வெட்டித்துறை குழந்தைகள் உட்பட 64 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2 21 அக்டோபர் 1987, யாழ்ப்பாண மருத்துவமனை தீபாவளி அன்று 68 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மருத்துவர்கள், பணியாளர்கள், அதிகாரிகள், நோயாளிகளும் அடங்குவர். அவர்களின் உடல்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. யாழ்ப்பாண மருத்துவமனை படுகொலைக்கு 18 நாட்கள் கழித்து அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி இந்திய அமைதி காக்கும் படை தன் கடமைகளை ஒழுக்கமாக செய்து வருவதாக அறிக்கை விட்டார். (லோக் சபா 9 நவம்பர் 1987)
3. 9 நவம்பர் 1987 இந்திய அமைதி காக்கும் படையால் காயத்துக்கு உள்ளான 4 பொதுமக்கள் சாண்டிலிப்பையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தில் வெள்ளைக் கொடியோடு சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்திய அமைதி காக்கும் படையால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
4. ஆகத்து 2-3, 1989 64 ஈழத்தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்த கொலைக்களத்தில் இருந்த 300 பொதுமக்களும் சுப்பிரமணியம் மற்றும் சிவகணேசு வீட்டில் அடைக்கலம் அடைந்தனர். அவர்கள் வீடுகளுள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படை அடைக்கலம் அளித்த மற்றும் 12 பொதுமக்களையும் சுட்டுக்கொன்றது.
5. மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் பொதுமக்களை இந்திய அமைதி காக்கும் படை கொன்றுள்ளது.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Economic Burden by Sending IPKF in Sri Lanka" (PDF). Press Information Bureau of India – Archive. 15 December 1999. Archived (PDF) from the original on 28 September 2020. பார்க்கப்பட்ட நாள் 16 April 2020.
  2. "Where In-fighting generates Fervour & Power: ISIS Today, LTTE yesterday". 17 July 2014. Archived from the original on 17 October 2023. பார்க்கப்பட்ட நாள் 11 October 2023.
  3. 3.0 3.1 3.2 "Details of Indian IPKF war crimes/genocide". eurasiareview.com. 24 March 2013. Archived from the original on 2013-05-10. பார்க்கப்பட்ட நாள் 2014-05-19.