சாய்தளம்

(சாய் தளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வெவ்வேறு உயரங்களில் முனைப்பகுதிகளைக் கொண்டமையும் அழுத்தமான மேற்பரப்பை சாய்தளம் எனலாம். இத்தகைய சாய்தளத்தின் மூலம் பாரமான பொருளொன்றை மேல்நோக்கி நகர்த்துவது நேரடியாக மேல்நோக்கி பாரத்தை உயர்த்துவதை விட குறைந்த விசையால் ஆற்றமுடியும்.

சாய்தளமொன்றில் பிரயோகிக்க வேண்டிய விசையைக் கணித்தல்

தொகு
 
Key:
N = செவ்வண் விசை - தளத்திற்கு நிலைக்குத்தானது
m = பொருளின் திணிவு
g = புவியீர்ப்பு ஆர்முடுகல்
θ =(ரீட்டா) கிடையிலிருந்து சாய்தளத்தின் சாய்வு
f = உராய்வு விசை

சாய்தளம் ஒன்றின் மீதுள்ள பொருளில் உணரப்படும் விசைகளைக் கணிக்கும் பொது மூன்று பிரதான விசைகள் கருத்தில் கொள்ளப்படும். அவை:

  1. செவ்வண் விசை(N)-பொருளின் மீது தாக்கும் புவியீர்ப்பு விசைக்கு சமனாக தளத்தால் கொடுக்கப்படும் மறுதாக்கம் அ-து mg cos θ
  2. புவியீர்ப்பு விசை(mg)
  3. உராய்வு விசை(f)- தளத்திற்கு சமானமாக


புவியீர்ப்பு விசை சாய்தளத்தின் தளத்திற்கு சமாந்தரமாகவும் நிலைக்குத்தாகவும் இரு வகையில் ஈடு செய்யப்படும்.

  1. கீழ் நோக்கி அசைவு இல்லை. ஆகவே: N = mg cos θ
  2. பொருள் ஓய்விலிருக்கும் போது: உராய்வு விசை f = mg sin θ
  • mg sin θ ஆனது f விடப் பெரிது ஆயின் சாய்தளத்தின் மீது பொருள் கீழ்நோக்கி இயங்கும்.

சாய்தளமொன்றின் பொறிமுறை நயம்

தொகு

எளிய பொறியொன்றின் பொ.மு.ந என்பது சுமைக்கும் எத்தனத்திற்கும் இடையிலான விகிதம் ஆகும். இது சாய்தளமொன்றுக்கு சாய்தளத்தின் நீளத்திற்கும் அதன் உயரத்திற்கும் இடையிலான விகிதம் ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்தளம்&oldid=2731729" இலிருந்து மீள்விக்கப்பட்டது