சாய் பல்கலைக்கழகம்

சாய் பல்கலைக்கழகம் (Sai University) என்பது தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம், பையனூர் அருகே ராஜீவ் காந்தி சாலை (மா. நெ. 49ஏ)-இல் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 2018இல் நிறுவப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதிலிருந்து 90 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசால் சட்டமியற்றப்பட்ட நிறுவப்பட்டு முதல் தனியார் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும்.

சாய் பல்கலைக்கழகம்
வகைதனியார்
உருவாக்கம்2018
வேந்தர்கே. வி. இரமணி
துணை வேந்தர்ஜாம்செட் பரூசா
அமைவிடம்
பன்னையூர்
, ,
இந்தியா

12°39′15″N 80°09′28″E / 12.65416°N 80.15771°E / 12.65416; 80.15771
இணையதளம்saiuniversity.edu.in

வரலாறு

தொகு

சாய் பல்கலைக்கழகம், நிறுவனர்-வேந்தர் கே.வி. இரமணி. இவர் ஒரு இந்திய தொழிலதிபர். இவர் தனது செல்வத்தில் 85%க்கும் அதிகமான ஸ்ரீ சாய் அறக்கட்டளைக்கு (சாய் கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் அறக்கட்டளை) நன்கொடையாக அளித்தார்.[1][2] இந்த அறக்கட்டளை மூலம் 320 கோடி (US$40 மில்லியன்) செலவில் பல்கலைக்கழகத்திற்கான உள்கட்டமைப்பை உருவாக்கப்பட்டது.[3]

இரமணி சனவரி 2018-இல் மாநில அரசை பல்கலைக்கழகம் தொடங்குவது தொடர்பாக அணுகினார்.[4] இது சாய் பல்கலைக்கழக சட்டம், 2018ஐ அறிமுகப்படுத்த வழிவகுத்தது.[2] அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு 90 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் சட்டம் இயற்றப்பட்ட முதல் தனியார் பல்கலைக்கழகங்களான சிவ நாடார் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான மசோதாவுடன் 2018 சூலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.[4][5][6] ஜாம்ஷெட் பருச்சா சூலை 2020-இல் இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். ஆகத்து 2020-இல் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இப்பல்கலைக்கழகத்திற்கான அடிக்கலை நாட்டினார்.[7] இப்பல்கலைக்கழகம் 2021-22ஆம் ஆண்டிற்கான சேர்க்கையை சனவரி 2021இல், கலை மற்றும் அறிவியல், கணினி மற்றும் தரவு அறிவியல் மற்றும் சட்டப் படிப்புகளில் தொடங்கியது.[8] இது ஆகத்து 2021-இல் செயல்படத் தொடங்கியது.[1] 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல்வர் மு. க.ஸ்டாலினால் கல்விக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.[9][10]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Swathi, Moorthy; Srikanth, Chandra R. (3 November 2021). "Meet KV Ramani, who donated 80% of his wealth to Shirdi Sai Baba and is now building Sai University" (in en). Moneycontrol. https://www.moneycontrol.com/news/business/meet-kv-ramani-who-donated-80-of-his-wealth-to-shirdi-sai-baba-and-is-now-building-sai-university-7670061.html. 
  2. 2.0 2.1 "Sai University Act, 2018". www.bareactslive.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-13.
  3. Sujatha, R. (6 July 2018). "New universities to come up on outskirts" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/new-universities-to-come-up-on-outskirts/article24347194.ece. 
  4. 4.0 4.1 Sujatha, R. (9 June 2021). "Sai University to start functioning from August, says founder" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/sai-university-to-start-functioning-from-august-says-founder/article34767764.ece. 
  5. "TN adopts Bills for setting up Shiv Nadar, Sai varsities". Business Standard India. 5 July 2018. https://www.business-standard.com/article/pti-stories/tn-adopts-bills-for-setting-up-shiv-nadar-sai-varsities-118070501158_1.html. 
  6. "Shiv Nadar University, Chennai launched; admissions open in April 2021" (in en). Business Line. 29 October 2020. https://www.thehindubusinessline.com/news/education/shiv-nadar-university-chennai-launched-admissions-open-in-april-2021/article32971118.ece. 
  7. "CM Palaniswami lays foundation stone for Sai University". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-10-25.
  8. "Sai University opens Admissions for its first Academic Session 2021-22". India Education Diary. 10 June 2021. https://indiaeducationdiary.in/sai-university-opens-admissions-for-its-first-academic-session-2021-22/. 
  9. "30,000-sqft academic building at Sai University inaugurated by Stalin". The New Indian Express. https://www.newindianexpress.com/cities/chennai/2022/may/18/30000-sqft-academic-building-at-sai-university-inaugurated-by-stalin-2454876.html. 
  10. "Stalin inaugurates Sai University’s first academic block" (in en-IN). தி இந்து. 2022-05-17. https://www.thehindu.com/news/national/tamil-nadu/stalin-inaugurates-sai-universitys-first-academic-block/article65422402.ece. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்_பல்கலைக்கழகம்&oldid=3920294" இலிருந்து மீள்விக்கப்பட்டது