சாரங் சென்னை

(சாரங்க் சென்னை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாரங்க் சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் ஆண்டுதோறும் சனவரி மாதக்கடைசி வாரத்தில் மாணவர்களால் நடத்தப்பெறும் கலைவிழாவாகும். கல்லூரிகளிடையே புகழ்பெற்று வரும் இவ்விழாவிற்கு கடந்த ஆண்டு நாட்டின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 20,000க்கும் கூடுதலான மாணவர்கள் பங்கெடுக்கின்றனர்[1]. இதன் அலுவல்முறை இணையதளம் பரணிடப்பட்டது 2021-05-13 at the வந்தவழி இயந்திரம் 2010 ஆண்டிற்கான நிகழ்ச்சிகளை பட்டியலிடுகிறது.

இது முன்னர் மார்டி கிரா ('Mardi Gras') என்ற செர்மானிய பெயரில் அழைக்கப்பட்டது.உலக அளவில் அறியப்பட்டபின்,பிற நாட்டு கலைநிகழ்ச்சிகளுடன் குழப்பம் வராதிருக்க இந்தப் பெயர் சூட்டப்பட்டது.இவ்விழாவின்போது பல போட்டிகள்,பயிலரங்குகள்,கண்காட்சிகள்,கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.இ.தொ.க சென்னையின் பசுமையான சூழலில் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளைக் காணவும் பங்கேற்கவும் பெரும் உற்சாகம் காணப்படுகிறது.

கலைநிகழ்ச்சிகள் தொகு

ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவின்போது ஏற்பாடு செய்யப்படும் தொழில்முறை கலைநிகழ்ச்சிகளும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.செவ்விசை இரவு, மெல்லிசை மற்றும் திரையிசை இரவுகள்,மேற்கத்திய ராக் இசை இரவு என பல்வேறு வகையிலான இசைநிகழ்ச்சிகளும் நடன நிகழ்ச்சிகளும் போட்டியாளர்களுக்கு மாற்றாகவும் அமைகிறது.முந்தைய ஆண்டுகளில் உரியா ஹெப்,பரிக்கிரமா,லக்கி அலி, கே கே,கார்த்திக்,ஸ்ட்ரிங்க்ஸ்,க்ளோபல் ரிதம்ஸ்,மிண்டா,உஸ்தாத் பிஸ்மில்லா கான்,உஸ்தாத் சாகீர் உசைன் போன்றவர்கள் பங்கு பெற்றுள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. சாரங்க் 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரங்_சென்னை&oldid=3347127" இலிருந்து மீள்விக்கப்பட்டது