சாரடர்த்தி

சாரடர்த்தி அல்லது தன்னீர்ப்பு (Relative Density or Specific Gravity) என்பது ஒரு ஒப்பீட்டு முறையாகும்[1][2]. அதாவது ஒரு பொருளின் அடர்த்தி நீரின் அடர்த்தியினது எத்தனை மடங்கு என்பதே அப்பொருளின் சாரடர்த்தி ஆகும். பொருட்கள் நீரில் மிதக்கும் தகவைக் கொண்டு அவற்றின் சாரடர்த்தியினை நீருடன் ஒப்பிட முடியும். நீரில் மிதக்கக்கூடிய பொருட்கள் நீரை விடக் குறைவான சாரடர்த்தியையும் நீரில் அமிழ்கின்ற பொருட்கள் நீரினை விடக் கூடிய சாரடர்த்தியினையும் கொண்டுள்ளன. நீரின் சாரடர்த்திப் பெறுமானம் 1 எனக் கொள்ளப்பட்டால் மிதக்கக்கூடியவை 1ஐ விடக் குறைவான சாரடர்த்தியையும் அமிழக்கூடியவை 1ஐ விட கூடிய சாரடர்த்தியையும் கொண்டிருக்கும்.

சில பொருட்களும் சாரடர்த்திப் பெறுமானமும்:

  • மெழுகுவர்த்தி - 0.9
  • தக்கை - 0.26
  • இலேசான பலகை - 0.85
  • நீர் - 1
  • கண்ணாடி - 2.6
  • ஈயம் - 11.0
  • இரும்பு - 7.9

மேற்கோள்கள் தொகு

  1. Dana, Edward Salisbury (1922). A text-book of mineralogy: with an extended treatise on crystallography.... New York, London(Chapman Hall): John Wiley and Sons. பக். 195–200, 316. http://books.google.com/?id=rCwaAAAAYAAJ&pg=PA156. 
  2. Schetz, Joseph A.; Allen E. Fuhs (1999-02-05). Fundamentals of fluid mechanics. Wiley, John & Sons, Incorporated. பக். 111, 142, 144, 147, 109, 155, 157, 160, 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-34856-2. http://books.google.com/?id=YCSSolzuu9IC&pg=PP1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரடர்த்தி&oldid=2305042" இலிருந்து மீள்விக்கப்பட்டது