சாரணியக் குறிக்கோளுரை
சாரணிய இயக்கத்தின் சாரணியக் குறிக்கோளுரையான (Scout Motto) "தயாராயிரு" [1]எனும் சொற்றொடரின் நெருக்கமான மொழிபெயர்ப்பைப் பரவலாக அனைத்து இயக்கங்களும் பயன்படுத்துகின்றன. இந்தக் குறிக்கோளுரை 1907 முதல் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான சாரணர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களின் உலக சங்கத்தின் (WAGGGS) பெரும்பாலான உறுப்பினர் அமைப்புகளும் இதே பொன்மொழிகளைப் பகிர்ந்து கொள்கின்றன.
சாரணியக் குறிக்கோளுரை | |||
---|---|---|---|
சிறப்புத் தகுதிக்கான சாரணர் முத்திரையில் "தயாராயிரு" எனும் சாரணர் குறிக்கோளுரை | |||
| |||
சிறுவர்களுக்கான சாரணியம் எனும் நூலின் முதல் பகுதியில் பேடன் பவுல் தயாராயிரு எனும் பதத்திற்கான பொருளை பின்வருமாறு விவரிக்கிறார்.
தயாராயிரு,
உங்கள் கடமைகளைச் செய்வதற்கு எண்ணம், உடல் ஆகிய இரண்டிலுமே எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் என்பதாகும்.
எண்ணத்தில் தயாராக இருக்க வேண்டும் என்பது, எப்போதும் ஒழுக்கமாக இருக்க வேண்டும், விபத்து அல்லது ஆபத்துக் காலங்களில் என்ன நிகழவாய்ப்புள்ளது என்பதனை முன்னரே அறிந்துவைத்துக்கொள்வதன் மூலம் சரியான நேரத்தில் தக்க உதவிகளைச் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்பதாகும்.
உடல் அளவில் தயாராயிரு என்பது , உடலை திடமாகவும், சுறுசுப்பாகவும், சரியான நேரத்தில் சரியான செயலைச் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்பதனைக் குறிப்பதாகும்.
— பேடன் பவுல், சிறுவர்களுக்கான சாரணியம் (1908), "Camp Fire Yarn.—No. 4. Scout Law." (Part I, p. 48)
சான்றுகள்
தொகு- ↑ "BSGIndia". www.bsgindia.org. பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.
மேலும் வாசிக்க
தொகு- Wilson, John S. (1959). Scouting Round the World (First ed.). Blandford Press.