சாரம்
கட்டிடங்களையோ வேறு அமைப்புக்களையோ கட்டும்போதோ அல்லது அவற்றில் திருத்த வேலைகள் செய்யும்போது உயரமான இடங்களில் நின்று வேலை செய்யவேண்டி இருக்கும். இதற்காகப் பணியாட்களையும் பொருட்களையும் தாங்கக்கூடிய வகையில் அமைக்கப்படுகின்ற தற்காலிகச் சட்டக (framework) அமைப்பே சாரம் (scaffolding அல்லது staging) எனப்படுகின்றது. இது, பலவகையான பொருட்களைக் கொண்டு அமைக்கப்படுவதுண்டு. முன்னர், மூங்கில், பனைமரம், நீளமான காட்டுக் கம்புகள் போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்தன. இன்றும் சில சந்தர்ப்பங்களில் இவை பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்காலத்தில் பெரிய கட்டுமானங்களின்போது பெரும்பாலும் உலோகக் குழாய்களினாலேயே சாரங்கள் அமைக்கப்படுகின்றன.