சாரா டிரிம்பின்

சுவிட்சர்லாந்து வேதியலாளர்

சாரா டிரிம்பின் (Sarah Trimpin) சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள[1] வேய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் வேதியியலாளர் மற்றும் பேராசிரியர் ஆவார்[2]. இவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் பொருண்மை நிறமாலையியல் அயனியாக்கம் தொடர்பான ஆய்வுகளை மையமாகக் கொண்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக எம்.எசு.சொலுயுசன்சு , எல்.எல்.சி என்ற நிறுவனம் ஒன்று உருவானது. மேம்பட்ட அயனியாக்க முறைகளை தொழிற்சாலைகளுக்கு கொண்டு வருவதை இந்நிறுவனம் தன்னுடைய நோக்கமாகக் கொண்டிருந்தது. இவரது பணியை 2019 ஆம் ஆண்டு அமெரிக்க பொருண்மை நிறமாலையியல் சமூகம் பீமன் பதக்கம் வழங்கி அங்கீகரித்துள்ளது.

சாரா ட்டிரிம்பின்
Sarah Trimpin
பிறப்புசுவிட்சர்லாந்து
துறைபுரோட்டீன் ஆய்வு
பணியிடங்கள்வேய்ன் மாநில பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கான்சுடான்சு பல்கலைக்கழகம்
Academic advisorsடேவிட் இ கிளெம்மர்
விருதுகள்
  • பீமன் பதக்கம்

டிரிம்பின் 1999 ஆம் ஆண்டு செருமனியிலுள்ள கான்சுடான்சு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும் 2002 ஆம் ஆண்டு மைன்சு நகரத்திலுள்ள பாலிமர் ஆராய்ச்சிக்கான மேக்சு பிளாங்க் நிறுவனத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்[2]. அமெரிக்காவின் ஒரிகான் மாநில பல்கலைக்கழகம் மற்றும் இந்தியானா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மேறபடிப்பை முடித்த பிறகு, 2008 ஆம் ஆண்டில் வேய்ன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்[1].

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Professor Sarah Trimpin, Wayne State University : Waters". Archived from the original on 2020-07-02. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. 2.0 2.1 "www.chem.wayne.edu". பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_டிரிம்பின்&oldid=3583969" இலிருந்து மீள்விக்கப்பட்டது