சாரா தோட்சன் இராபின்சன்

சாரா தோட்சன் இராபின்சன் (Sarah Dodson-Robinson) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.

இளமையும் கல்வியும் தொகு

இவர் கலிபோர்னியாவில் உள்ள இலாசு ஏஞ்சலீசில் பிறந்தார். இவர் தன்னை எப்போதும் சால்லி தோட்சன் இராபின்சன் என அழைக்கவே விரும்பினார். இவரது ஆர்வம் விண்வெளி அறிவியலில் குவிந்திருந்தது. இவர் ஏழு எட்டாம் அகவையிலேயே கோள் கழகத்தில் சேர்ந்து இதழ்களில் வெளியாகிய கோள்கள், அவற்றின் நிலாக்களின் சிறு விளம்பரப் படங்களைத் திரட்டியுள்ளார். இவர் 10-11 ஆம் அகவையில் டெக்சாசுக்கு அருகில் இருந்த ஆசுட்டினில் 18 மாதங்கள் வாழ்ந்துவந்தார். இவர் சுட்டீவன் ஆக்கிங்கின் தாக்கத்தால் முதலில் வானியலில் ஆர்வம் மீதூரப் பெற்றுள்ளார். பின்னர் முறையே பட்டப்படிப்பு, பட்டமேற் படிப்பு அறிவுரையாளர்களாகிய எல்லிகாட் ஆர்ச்சு, கிரெகு இலாபுலின் ஆக்கியோரின் தாக்கம் பெற்றுள்ளார்.

இவர் 2002 இல் தன் அறிவியல் இளவல் பட்டத்தை உரோசெசுட்டர் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெற்றார். இவர் 2005 இல் தன் அறிவியல் முதுவர் பட்டத்தைச் சாந்த குரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் 2008 ஜூனில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை வானிய்லிலும் வானியற்பியலிலும் பெற்றார்.

வாழ்க்கைப்பணி தொகு

இவர் முதன்மையாக கோள் உருவாக்கம் பற்றியும் கோள்தொல்லியல் பற்றியும் ஆய்வு மேற்கோள்கிறார். என்றாலும் இவர் முதனிலை விண்மீன் வட்டு வேதியியல், பால்வெளி வேதிப் படிமலர்ச்சி, பழுப்புக் குறுமீன்கள் போன்ற மரபான வானியல் தலைப்புகளிலும் கூட ஆய்வு செய்வதுண்டு. கோள் வளர்ச்சி சார்ந்த இயக்க, வேதிச் சூழல்களை எண்ணியல் முறையில் ஒப்புருவாக்கம் செய்தும் கோட்டபாட்டுப் பகுப்பாய்வுகளாலும் புறவெளிக்கோள்களின் உருவாக்க வரலாற்றையும் சூரியக் குடும்ப வான்பொருள்களின் உருவாக்க வரலாற்றையும் வெளிப்படுத்துகிறார். இவர் 2010 இல் “திண்மச் செறிவு ஊட்டப் பகுதிகளில் வருணனும் (யுரேனசும்) விண்மியமும் (நெப்டியூனும்) உருவாதல்: இயங்கியலும் வேதியியலும் சார்ந்து” எனும் ஆய்வுரையை இயார்க்கசு இதழில் வெளியிட்டார்.[1] இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இவர் முன்பு டெக்சாசு பல்கலைக்கழகத்திலதுதவிப் பேராசிரியராக இருந்தார். இவர் 2014 இளவேற்கால முதலாக தெலாவேர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பித்து வருகிறார்.

தகைமைகளும் விருதுகளும் தொகு

இவர் தன் பணிக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் பல தகைமைகளும் விருதுகளும் பெற்றுள்ளார்.இவர் டெக்சாசு பல்கலைக்கழகத்தில் பணியில் இருந்தபோதே பயிற்றுவிப்புச் சிறப்புத்திறன் கழகத்தில் பட்டய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவர் 2013 இல்ஆமெரிக்க வானியல் கழகத்தில் இருந்து வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்றார். இவர் தேசிய அறக்கட்டளையின் வாழ்க்கைப்பணி விருதைத் தனது “ தூசு வட்டுகளில் உருவாகிய பெருங்கோள்கள்” எனும் ஆய்வுக்காகப் பெற்றார்.

இவர் பின்வரும் தகைமைகளையும் பெற்றுள்ளார்:

  • சுபிட்சர் ஆய்வுறுப்பினர், 2008 செப்டம்பர் முதல் 2009 செப்டம்பர் வரை
  • கல்லூரி அறிவியலாளர் ஆய்வுநல்கைக்கான கல்வியியல் பாராட்டுகள்
  • ஆய்வுநல்கை காலம் 2007 செப்டம்பர் முதல் 2008 ஜூன் வரை
  • பல்கலைக்கழக சாந்தா குரூசு பயிற்றுவிப்பு ஆய்வுறுப்பினர், 2007 கோடை
  • தேசிய அறிவியல் அறக்கட்டளையின் பட்ட ஆராய்ச்சி ஆய்வுநல்கை
  • ஆய்வுநல்கை காலம் 2003எப்டம்பர் முதல் 2006 ஜூன் வரை
  • RIT அறிவியல் கல்லூரி நிறைவு விழாத் தகைமையாளர், மே 2002
  • RIT அறிவியல் கல்லூரி மீச்சிறப்பு அறிஞர் விருது, 2002

மேற்கோள்கள் தொகு

  1. “The formation of Uranus and Neptune in solid-rich feeding zones: Connecting chemistry and dynamics.” S. Dodson-Robinson & P. Bodenheimer, 2010, Icarus, vol. 207, p. 491.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_தோட்சன்_இராபின்சன்&oldid=3604682" இலிருந்து மீள்விக்கப்பட்டது