சாரா மேரி டெய்லர்

கம்பளித் தயாரிப்பாளர்

சாரா மேரி டெய்லர் (ஆகஸ்ட் 12, 1916 - 2000) மிசிசிப்பியைச் சேர்ந்த ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க கம்பளித் தயாரிப்பாளர் ஆவார். அவருடைய பணி 1970களில் கவனத்தை ஈர்த்தது. [1]

சாரா மேரி டெய்லர்
1997ல் டெய்லர்
பிறப்புஆகஸ்ட் 12, 1916
ஆண்டிங், அமெரிக்கா
இறப்பு2000
பணிகம்பளித் தயாரிப்பளர்
அறியப்படுவதுஅலங்கார துணி வடிவமைப்பாளராக

வாழ்க்கை

தொகு

கம்சாரா மேரி டெய்லர் ஆகஸ்ட் 12, 1916 அன்று மிசிசிப்பியின் ஆண்டிங் நகரில் பிறந்தார். [2] அவர் இளமையாக இருந்தபோது அவரது தாயார் பேர்லி போஸியிடம் கம்பளி நெய்தலைக் கற்றுக்கொண்டார். அவர் மிசிசிப்பி ஆற்றங்கரையில் உள்ள தோட்டங்களில் வசித்து வந்தார். மேலும் அவர் வீட்டுப் பணிப்பெண்ணாகவும், சமையல்காரராகவும், வயல்வெளியில் உதவியாளராகவும் பணியாற்றினார். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில், டெய்லர் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் அவர் கம்பளி தயாரிப்பு மூலம் வருமானம் ஈட்டினார். ஆடைகளைப் பயன்படுத்தி ஒட்டுக் கம்பளிகளை உருவாக்கினார். 1970 களில் மிசிசிப்பி பல்கலைக்கழக பேராசிரியர்களின் கல்வி ஆர்வத்திற்கு பெகோலியா வார்னரின் கம்பளிகள் பேசுபொருளாக இருந்ததைக் கண்ட பிறகு டெய்லர் தனது கம்பளித் தயாரிப்பில் அதிக ஆர்வத்தைப் பெற்றார். [3]

டெய்லர் மற்றும் அவரது தாயார் இருவரும் கம்பளி மற்றும் தலையணை வடிவமைப்புகளை உருவாக்கினர். அதில் சிவப்பு வோடுன் பொம்மை போன்ற உருவங்கள் பயன்படுத்தப்பட்டன. அவரது கடல்கன்னி கம்பளி (முன்னர் முயல் என்று அழைக்கப்பட்டது) மோஜோ கையை தூண்டுகிறது. சிவப்புச் சதுரங்கள் மற்றும் வோடோ உருவங்களை ஒட்டிய நீல நிற கைகளைக் கொண்டுள்ளது. [4] கலை வரலாற்றாசிரியர் மவுட் சவுத்வெல் வால்மனின் கூற்றுப்படி, டெய்லர் "கை உருவத்தின் குறியீட்டு அர்த்தங்கள் மற்றும் அழகியல் குணங்களில் விளையாடும் ஏராளமான கம்பளிகளை உருவாக்கியுள்ளார்." [5] டெய்லரின் குறுக்குக் கம்பளி, கொங்கோ மத அடையாளமான காங்கோ காஸ்மோகிராமின் தொடர்ச்சியைக் குறிக்கலாம் என்று வால்மேன் எழுதுகிறார். [6] டெய்லரின் கம்பளிகள் பொருத்தமற்ற மற்றும் எதிர்மோதும் வண்ண கலவைகளையும் பயன்படுத்துகின்றன. [7] தி கலர் பர்ப்பிள் படத்திற்காக ஒரு கைக்கம்பளி தயாரிக்க டெய்லர் நியமிக்கப்பட்டார். இந்த கம்பளி மற்றும் வார்த்தைகளை உள்ளடக்கிய கம்பளிகள் ஆகிய இரண்டும் ஆப்பிரிக்க அமெரிக்க கம்பளியின் எல்லா கிங் டோரே சேகரிப்பின் ஒரு பகுதியாகும். [8]

டெய்லர் ஐந்து முறை திருமணம் செய்து கொண்டார், அவருக்கு வில்லி என்ற ஒரு குழந்தை பிறந்து ஜூலை 10, 2000 இல் இறந்தார்.

டெய்லரின் கம்பளிகள் நேபர்வில், இல்லினாய்ஸ், சாண்டா ஃபே, நியூ மெக்ஸிகோ, பிலடெல்பியா, பென்சில்வேனியா, [9] மற்றம் மற்ற அமெரிக்க நகரங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மர்லின் நெல்சன் அவருக்காக "தி செஞ்சுரி க்வில்ட்" என்ற கவிதையை எழுதினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. name="majorref">Editors, Blackartstory org (2021-02-02). "Profile: Sarah Mary Taylor (1916-2000)". Black Art Story (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-30. {{cite web}}: |last= has generic name (help)
  2. "Sarah Mary Taylor". Smithsonian American Art Museum. பார்க்கப்பட்ட நாள் 2 October 2017.
  3. name="majorref">Editors, Blackartstory org (2021-02-02). "Profile: Sarah Mary Taylor (1916-2000)". Black Art Story (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-30. {{cite web}}: |last= has generic name (help)Editors, Blackartstory org (2021-02-02). "Profile: Sarah Mary Taylor (1916-2000)". Black Art Story. Retrieved 2021-03-30. {{cite web}}: |last= has generic name (help)
  4. Wahlman, Maude Southwell (2001). Self-taught Art: The Culture and Aesthetics of American Vernacular Art. Jackson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57806-380-9.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  5. name="African Arts"
  6. name="African Arts">Wahlman, Maude Southwell (November 1986). "African Symbolism in Afro-American Quilts". African Arts 20 (1): 74–75. doi:10.2307/3336568. https://archive.org/details/sim_african-arts_1986-11_20_1/page/74. 
  7. White, Shane (1999). Stylin': African American Expressive Culture from Its Beginnings to the Zoot Suit. Ithaca, N.Y. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-8283-6.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  8. Che, Jenny (December 12, 2014). "Philadelphia Museum of Art to Show Two Centuries of Black Artists". https://www.wsj.com/articles/philadelphia-museum-of-art-to-show-two-centuries-of-black-artists-1418415540. 
  9. Sarah Mary Taylor, "Hands Quilt," permanent collection of the Philadelphia Museum of Art.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_மேரி_டெய்லர்&oldid=3700046" இலிருந்து மீள்விக்கப்பட்டது