சார்லசு ரோஷர்

சார்லசு ரோஷர் (Charles G. Rosher (நவம்பர் 17, 1885 – சனவரி 15, 1974) என்பவர் இரு தடவைகள் அகாதமி விருது பெற்ற ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவிற்கான அகடமி விருதைப் பெற்ற முதல் ஒளிப்பதிவாளர் இவர். ஊமைப்படக் காலம் முதல் 1950கள் வரை பணியாற்றியுள்ளார். இவர் இலண்டனில் பிறந்தவர், பின்னர் அமெரிக்காவில் குடியேறினார். இவர் சன்ரைஸ்: ஏ சோங் ஃபோர் டூ ஹியூமன்ஸ் ஆகிய இரு திரைப்படங்களுங்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான அகாதமி விருது பெற்றுள்ளார். இவர் புகைப்படக்கலை தொடர்பான படிப்பை முடித்ததும் செய்திப்படம் எடுக்கும் பிரிவில் பணிபுரிந்தார். 1920களில் ஹாலிவுட்டில் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராகத் திகழ்ந்தார். 1927 ஆம் ஆண்டு வெளியான சன்ரைஸ் திரைப்படம் திரைப்படத்துறையின் ஒளிப்பதிவில் முக்கிய மைல்கல் ஆகும். இவர் பல இடங்களில் பணிபுரிந்திருந்தாலும் கடைசி 12 வருடங்கள் மெட்ரோ-கோல்ட்வின்மேயர் நிறுவனத்தில் பணியாற்றினார். லிஸ்பன் நகரில் ஒரு விபத்தில் இவர் மரணமடைந்தார்.[1]

சார்லசு ரோசர்
Charles Rosher
பிறப்புநவம்பர் 17, 1885(1885-11-17)
இலண்டன், இங்கிலாந்து
இறப்புசனவரி 15, 1974(1974-01-15) (அகவை 88)
லிஸ்பன், போர்த்துகல்
பணிஒளிப்பதிவாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1912–1955
பட்டம்அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்க நிறுவன உறுப்பினர்
விருதுகள்சிறந்த ஒளிப்பதிவாளருக்கான அகாதமி விருது
1928 சன்ரைஸ்: ஏ சோங் ஃபோர் டூ ஹியூமன்ஸ்

வெளி இணைப்புகள்தொகு

மேற்குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லசு_ரோஷர்&oldid=2918990" இருந்து மீள்விக்கப்பட்டது