சார்லஸ் சூரின்

சார்லஸ் சூரின் (Charles Jurine-1751-1819) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விலங்கியல் நிபுணர் ஆவார். செனீவா இயற்கை வரலாற்றுச் சங்கத்திற்கு வெளவால்கள் தங்கள் காதுகளை வழிநடத்த பயன்படுத்துவது குறித்து லாசரோ ஸ்பல்லன்சானி எழுதிய கடிதத்தால் ஈர்க்கப்பட்ட சார்லஸ் சூரின், அவருடன் தொடர்பு கொண்டார். தனது கண்டுபிடிப்புகள் குறித்து ஸ்பல்லன்சானியுடன் கலந்துபேசி ஆய்வின் முடிவுகளை உறுதிப்படுத்தினார். ஆனால் சார்லஸ் சூரின் ஆய்வானது, டொனால்ட் கிரிஃபின் மற்றும் ஜி. டபிள்யூ. பியர்ஸ் ஆகியோர் எதிரொலி மூலம் இருப்பிடத்தை அறியும் கருத்தினை முன்மொழியும் வரை (20 ஆம் நூற்றாண்டு வரை) புறக்கணிக்கப்பட்டது.

குறிப்புகள் தொகு

  • Griffin, D.R. (1986). Listening in the Dark. Cornell University Press, Ithaca
  • Houston, R., Parsons, S., Jones, G., and Bennett, A. (2001). Biosonar: Seeing with Sound. www.biosonar.bris.ac.uk (2001).
  • Pollak, G.D. and Casseday, J.H. (1989). The Neural Basis of Echolocation in Bats. Springer-Verlag, Berlin
  • Thomas, J.A., Moss, C.F., and Vater, M. (2004). In: Echolocation in Bats and Dolphins. (2004). The University of Chicago Press, Chicago
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லஸ்_சூரின்&oldid=3027884" இலிருந்து மீள்விக்கப்பட்டது