சாலங்காயன்
சாலங்காயன் [1] பெருங்கதை காப்பியத்தில் வரும் கதைமாந்தர்களில் ஒருவன். உதயணன் காப்பியத் தலைவன். உதயணனின் முதல் மாமனார் பிரச்சோதனன். பிரச்சோதனனின் அமைச்சனாகவும், படைத்தலைவனாவும் விளங்கியவன் சாலங்காயன்.
உதயணனைப் பிடித்து வருவதற்காக 10,000 படைவீரர்களுடனும் எந்திர யானையுடனும் சென்றான். எந்திர யானைக்குள்ளே ஒளிந்திருந்து வெளிப்பட்டு உதயணனைத் தாக்கிய வீரர்களை வயந்தகன் கொன்ற பின்னர் உதயணனைத் தாக்கினான். இவனுடன் இருந்த அனைவரையும் உதயணன் கொன்ற பின்னர் இந்தச் சாலங்காயனை 'அமைச்சனைக் கொல்லலாகாது' என உதயணன் விட்டுவைத்தான். உதயணன் வீசிய வாள் எந்திர யானையின் கொம்பில் பட்டு முரிந்துபோனபோது உதயணனைக் கைது செய்து கொண்டுவந்தவன் இந்தச் சாலங்காயன்.
மத யானையை நூலால் கட்டுவது போலச் சாலங்காயன் உதயணனைத் தன் மேலாடையால் கட்டித் தேரின்மீது ஏற்றி, உச்சைனி நகருக்குக் கொண்டுவந்தான். தன் அரசன் பிரச்சோதனனுக்குத் தெரிவித்தான். பிரச்சோதனன் ஆணைப்படி உதயணனை இருட்டறை ஒன்றில் அடைத்துவைத்தான்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40.
{{cite book}}
: Check date values in:|year=
(help) உ.வே.சா. எழுதிய உதயணன் சரித்திரச் சுருக்கம்