பிரச்சோதனன்
பிரச்சோதனன் [1] என்பவன் பெருங்கதை இலக்கியத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருவன். இந்த இலக்கியத்தின் காப்பியத் தலைவன் உதயணன். இவனது முதல் மாமனார் பிரச்சோதனன். பிரச்சோதனன் அவந்தி நாட்டு அரசன். இவனுக்குப் பதினாயிரம் (10,000) மனைவியர். அவர்களில் முதன்மையானவள் பதுமகாரிகை. பதுமகாரிகையின் மகள் வாசவதத்தை. மனைவியருக்குப் பிறந்த பிள்ளைகள் பலர். அவர்களில் பாலகன், பாலகுமரன், கோபாலகன் என்னும் மூவரும் சிறந்து விளங்கிய முதல்வர்கள்.
பிரச்சோதனன் தனக்குத் திறை செலுத்தாதவர்கள் வத்தவ நாட்டு அரசன் உதயணனும், வைசாலி நகரத்து அரசன் யூகியும் என அறிந்து அவர்களை வெல்லத் திட்டமிட்டான். உதயணன் தனக்கு உதவிய தெய்வயானையை இழந்து அதனைத் தேடிக்கொண்டு காட்டில் அலைவதை அறிந்து ஒருபுறம் யூகியைத் தாக்கவும், மற்றொருபுறம் உதயணனைத் தந்திரத்தால் வெல்லவும் திட்டமிட்டான்.
எந்திர யானை ஒன்று செய்து அனுப்பி, போரிட்டு, உதயணனைக் கைது செய்து கொண்டுவந்தான்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40.
{{cite book}}
: Check date values in:|year=
(help) உ.வே.சா. எழுதிய உதயணன் சரித்திரச் சுருக்கம்