சாலிசா தாமி

விங் கமாண்டர் சாலிஷா தாமி (Wing commander Shaliza Dhami), இந்திய வான்படையின் முதல் பெண் அதிகாரி ஆவார்.[2] [3][4][5][6]இந்திய விமானப்படையின் மேற்குப் பகுதியில் போர்ப் பிரிவை வழிநடத்த குரூப் கேப்டனாக சாலிசா தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். குரூப் கேப்டன் ஷாலிசா தாமி 2003ல் ஹெலிகாப்டர் விமானியாக நியமிக்கப்பட்டார். இவர் 2800 மணி நேரத்திற்கும் மேலாக விமானப் பயண அனுபவம் பெற்றவர். சாலிஷா தாமி தற்போது ஒரு முன்னணி கட்டளைத் தலைமையகத்தின் செயல்பாட்டுப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் இந்திய வான்படையின் தலைமைத் தளபதியிடமிருந்து இரண்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

விங் கமாண்டர்

சாலிஷா தாமி
பிறப்புலூதியானா, பஞ்சாப், இந்தியா
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்திய வான்படை
சேவைக்காலம்2003–தற்போது வரை
தரம் விங் கமாண்டர்
தொடரிலக்கம்27773
துணை(கள்)வினீத் ஜோஷி[1]

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் வாழும் ஹர்கேஷ் தாமி-தேவி குமாரி தம்பதியருக்கு பிறந்த சாலிஷா தாமி[7]மின்னனு மற்றும் தகவல் தொடர்பு படிப்பில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார்.[8][9]2003ல் சாலிஷா தாமி தனது முதல் விமானப் பறப்பை மேற்கொண்டார். குறுகிய சேவை ஆணையத்தின் தேர்வில் வென்ற சாலிஷா தாமி 20 டிசம்பர் 2003 அன்று இந்திய வான்படையின் ஹெலிகாப்டர் விமானியாக பணியில் சேர்ந்தார்.[10]20 டிசம்பர் 2005 அன்று பிளைட் லெப்டினண்ட் ஆக பதவி உயர்வு பெற்றார். 20 டிசம்பர் 2009 அன்று ஸ்குவாட்ரன் லீடராக பதவி உயர்வு பெற்றார்.[11][12]சாலிஷா தாமி தற்போது விங் கமாண்டர் பதவியில் உள்ளார்.

இதனையும் காண்கா

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Who is Shaliza Dhami ?", Indian Expressdate=2023-03-08
  2. Group Captain Shaliza Dhami becomes first woman officer to command IAF combat unit
  3. Group Captain Shaliza Dhami Becomes First IAF Woman Officer To Command Combat Unit
  4. "'Sent her to a govt school, never questioned her choices': IAF officer Shaliza Dhami's proud parents". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-08. பார்க்கப்பட்ட நாள் 2023-03-08.
  5. Bureau, The Hindu (2023-03-07). "Group Captain Shaliza Dhami becomes the first woman IAF officer to get command appointment" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/group-captain-shaliza-dhami-becomes-the-first-woman-iaf-officer-to-get-command-appointment/article66592226.ece. 
  6. "First woman officer selected to command a frontline combat unit in IAF". The Times of India. 2023-03-07. https://timesofindia.indiatimes.com/india/first-woman-officer-selected-to-command-a-frontline-combat-unit-in-iaf/articleshow/98481039.cms?from=mdr. 
  7. "#GoodNews: In a First, Woman IAF Officer Becomes Flight Commander". The Quint (in ஆங்கிலம்). 28 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-08-30.
  8. Sharma, Aditya (27 August 2019). "Shaliza Dhami Is First Woman Air Force Officer To Become Flight Commander". NDTV. ANI. பார்க்கப்பட்ட நாள் 2019-08-30.
  9. Joshi, Shamani (28 August 2019). "The Indian Air Force Just Got its First Female Flight Commander". Vice (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-30.
  10. "Part I-Section 4: Ministry of Defence (Air Branch)". The Gazette of India. 1 April 2006. p. 443. http://egazette.nic.in/WriteReadData/2006/W_13_2011_094.pdf. 
  11. "Part I-Section 4: Ministry of Defence (Air Branch)". The Gazette of India. 28 June 2008. p. 796. http://egazette.nic.in/WriteReadData/2008/W_26_2009_004.pdf. 
  12. "Part I-Section 4: Ministry of Defence (Air Branch)". 5 March 2011. p. 487. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலிசா_தாமி&oldid=3777382" இலிருந்து மீள்விக்கப்பட்டது