சாவித்திரி சிறீதரன்

இந்திய நடிகை

சாவித்திரி சிறீதரன் (Savithri Sreedharan) என்பவர் ஓர் இந்திய நாடக மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோழிக்கோட்டை தளமாகக் கொண்ட பல நாடகக் குழுக்களின் ஒருவராக இருந்து வருகிறார். 2018-இல் சுடானி பிரம் நைஜீரியா திரைப்படத்தில் அறிமுகமானார். இது இவருக்கு 66ஆவது தேசியத் திரைப்பட விருதுகளில் சிறப்பு விருதினைப் பெற்றுத் தந்தது. இவரது மற்ற முக்கிய படங்கள் வைரசு (2019) மற்றும் தாகினி (2018).

சாவித்திரி சிறீதரன்
பிறப்புசாவித்திரி
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2018–முதல்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

மலையாள நாடக உலகில் கடந்த நாற்பது ஆண்டுகளாக நிரந்தரத் தொழில்முறை நாடக நடிகையாக சாவித்திரி உள்ளார். கலிங்கா, சங்கமம், இசுடேஜ் இந்தா, சிரந்தனா திரையரங்குகள்[1] போன்ற கோழிக்கோடு சார்ந்த நாடக அரங்குகளை இவர் சார்ந்துள்ளார்.

திரைப்படவியல்

தொகு
  • குறிப்பிடப்படாத வரை அனைத்து படங்களும் மலையாள மொழியில் இருக்கும் .
சாவித்திரி சிறீதரன் நடித்த திரைப்படப் பட்டியல்
ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் குறிப்புகள்
1991 கடவு
2010 வலியங்கடி அந்தர்ஜனம்
2013 காலை உணவு பழைய ரயில் பயணி குறும்படம்
2015 மாம்பழ மக்கள் சரோஜினி நாயர் குறும்படம்
2018 நைஜீரியாவில் இருந்து சூடானி ஜமீலா
2018 டாகினி உரோசுமேரி
2019 மேரா நாம் ஷாஜி பங்கஜம்
2019 வைரஸ் ஜமீலா
2019 மொஹபத்தீன் குஞ்சப்துல்லா அலிமாவின் பக்கத்து வீட்டுக்காரர்
2019 இட்டிமணி: சீனாவில் தயாரிக்கப்பட்டது முதியோர் இல்லத்தில் கைதி
2019 ஒரு கடத்து கதை சுபைதா
2020 ஊர்மிளா பாட்டி இசை தொகுப்பு
2021 ஐஸ் ஒரத்தி நளினி
2022 பட குஞ்சி
2022 மடப்பள்ளி யுனைடெட் பாட்டி
2022 மஹி
2022 பாப்பான் சாக்கோவின் தாய்
2022 7 கடல்களுக்கு அப்பால்
2022 மெய் ஹூம் மூசா நாராயணி
2023 கிறிஸ்டி கிறித்துவ அம்மாச்சி
2024 வயசேத்ரயாயி முப்பாத்தி..!! [2]

நாடகங்கள்

தொகு
  • ராஜ்யசபா
  • இது பூமியானு
  • கபர்
  • சிருஷ்டி
  • தீபசுதம்பம் மகாச்சார்யம்
  • இஜ்ஜ் நல்லொரு மனிச்சனகன் நோக்
  • பக்கிடா 12
  • படநிலம்
  • மேடபத்து
  • அக்கரபச்சா
  • ஆலமரத்தம்
  • கருத்த வெல்ல
  • நோட்டுகள்
  • தாழ்வார
  • தத்வமசி
  • வாழியம்பலம்
  • சனிக்குன்னு குடும்பசமேதம்

விளம்பரங்கள்

தொகு
  • இரட்டை குதிரை
  • சூரிய ஒளி

விருதுகள்

தொகு
  • 1977 – சிறந்த நாடகக் கலைஞருக்கான கேரள மாநில விருது[3]
  • 1993 – சிறந்த நாடகக் கலைஞருக்கான கேரள மாநில விருது[3]
  • 2009 – நாடகத்திற்கான கேரள சங்கீத நாடக அகாதமி விருது[4]
  • 2018 – தேசிய திரைப்பட விருது – சிறப்புக் குணச்சித்திர நடிகை: சுடானி பிரம் நைஜீரியா
  • 2018 – சிறந்த குணச்சித்திர நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருது : சுடானி பிரம் நைஜீரியா
  • 2018 – சிறந்த துணை நடிகைக்கான ஏசியாநெட் திரைப்பட விருது: சுடானி பிரம் நைஜீரியா
  • 2018 – சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – மலையாளம்: சுடானி பிரம் நைஜீரியா

மேற்கோள்கள்

தொகு
  1. സോഹിൽ പി. (30 March 2018). "ഈ ഉമ്മമാരോട് എല്ലാവരും ചോദിക്കുന്നു; ഇത്രയും കാലം എവിടെയായിരുന്നു? | sudani from nigeria mother characters | sudani from nigeria umma| samuel ebola robinson". mathrubhumi.com. Archived from the original on 7 October 2019. பார்க்கப்பட்ட நாள் 11 June 2019.
  2. Vayasethrayayi Muppathi: - 'വയസെത്രയായി'..... ഇമ്പമാർന്ന ഗാനങ്ങളുമായി പുതിയ ചിത്രം; റിലീസ് മാർച്ച് 29നു [Vayasethrayayi Muppathi: 'How old are you'... A new film with melodious songs; The film will be released on March 29. (machine translation)] (in மலையாளம்). Zee News. 24 January 2024. Archived from the original on 1 February 2024. பார்க்கப்பட்ட நாள் 24 January 2024.
  3. 3.0 3.1 "Savithri Sreedharan – Character artist who played lovable Umma in 'Sudani From Nigeria'". 14 April 2019. Archived from the original on 23 December 2019. பார்க்கப்பட்ட நாள் 1 September 2019.
  4. "Kerala Sangeetha Nataka Akademi Award: Drama". Department of Cultural Affairs, Government of Kerala. Archived from the original on 28 June 2022. பார்க்கப்பட்ட நாள் 26 February 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவித்திரி_சிறீதரன்&oldid=4115248" இலிருந்து மீள்விக்கப்பட்டது