சாவோ அறக்கட்டளை

அரசு சாரா அமைப்பு

சாவோ அறக்கட்டளை (Tsavo Trust) என்பது ஒரு இலாப நோக்கற்ற வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பாகும். இது சாவோ கிழக்கு தேசியப் பூங்கா, சாவோ மேற்கு தேசியப் பூங்கா மற்றும் கென்யாவில் உள்ள சையுலி மலை தேசியப் பூங்கா ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த அறக்கட்டளை நிசியோகி வா மக்காவு மற்றும் புஷ் பைலட் ரிச்சர்ட் மொல்லர் ஆகியோரால் நிறுவப்பட்டது. அறக்கட்டளையின் ஆரம்ப நோக்கம் வனவிலங்குகளின் பாதுகாப்பு, குறிப்பாக ஆப்பிரிக்க யானைகள் மற்றும் தந்த வர்த்தகத்தைக் குறைப்பதாகும்.[1] [2] ஜூன் 2014 இல், சாவோ அறக்கட்டளையானது கென்யாவின் சின்னமும் மற்றும் மிகவும் பிரபலமான யானையுமான சடாவோவின் தந்தத்தை வேட்டையாடுபவர்களால் நஞ்சு கலந்தஅம்பினால் கொல்லப்பட்டதை அறிவித்தபோது சர்வதேச கவனத்திற்கு வந்தது. [3] [4] [5] [6]

சாவோ அறக்கட்டளை
நிறுவனர்இரிச்சர்டு மொல்லர் (தலைமைச் செயல் அலுவலர்)
இசுடூவர்டு எர்டு
தலைமையகம்
ஆள்கூறுகள்02°41′24″S 38°41′24″E / 2.69000°S 38.69000°E / -2.69000; 38.69000
சேவைப் பகுதி
சாவோ சுற்றுச் சூழல் அமைப்பு (16,000 சதுர மைல்கள் (41,000 km2))
சேவைகள்பாதுகாப்பு
முக்கிய நபர்கள்
நிசியோகி வா மக்காவு (வாரியத்தின் தலைவர்)
இர்ச்சர்ட் மொல்லர் (தலைமைச் செயல் அலுவலர்)
இசுடூவர்டு எர்டு
முனிரா பசீர்
பாட் அவோரி
கான்ரெட் தோர்பே
வலைத்தளம்tsavotrust.org

சாவோ சுற்றுச்சூழல் அமைப்பு 16,000 சதுர மைல்கள் (41,000 km2) கொண்டது அல்லது தெற்கு கென்யாவில் வறண்ட மற்றும் அரை வறண்ட நிலமாகும். இந்த பிராந்தியத்தில் உள்ள தேசியப் பூங்காக்கள் கென்யா வனவிலங்கு சேவையால் நிர்வகிக்கப்படுகின்றன. பூங்காக்களைச் சுற்றி, ஆனால் சாவோ சுற்றுச்சூழல் அமைப்பிற்குள், பல சிறிய நகரங்கள், கிராமங்கள் மற்றும் கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் உள்ளன. கென்யாவில் உள்ள ஆப்பிரிக்க யானைகளின் மிக அதிகள அளவிலான எண்னிக்கை இந்த அமைப்பில் உள்ளது. இது 2021 இல் 14,964 ஆக இருந்தது. [7]

சாவோ சுற்றுச்சூழல் அமைப்பில், பிராந்தியத்தில் உள்ள மக்களிடையே அதிக வறுமை விகிதம், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான மோசமான அணுகல், வாழ்விடத்தின் சீரழிவு, வளங்கள் மீதான இன மோதல், வனவிலங்கு இழப்பு மற்றும் நிதி பற்றாக்குறை இந்த சிக்கல்களைச் சமாளிக்க தொழில்நுட்ப ஆதாரங்கள் போன்ற பல முக்கியமான சிக்கல்கள் உள்ளன . இந்த சூழலில், பல்லுயிரியலைப் பாதுகாப்பது மற்றும் பெரிய சாவோ சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதும் சாவோ அறக்கட்டளையின் நோக்கமாகும். கென்யா வனவிலங்கு சேவையின் முக்கிய பங்காளியாக இருந்து, வான்வழி மற்றும் தரை பல்லுயிர் கண்காணிப்பு, வேட்டையாடுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குதல் போன்ற பணிகளை சாவோ அறக்கட்டளை செய்கிறது. அறக்கட்டளையானது சுற்றுச்சூழல் அமைப்பில்[8] சமூகப் பாதுகாப்புகளை நிறுவுவதற்கு முன்னோடியாக உள்ளது. இது மிகவும் தேவையான சமூக மேம்பாட்டு நன்மைகளை வழங்குகிறது. இதனால் வனவிலங்குகளுக்கான வாழ்விடத்தை அதிகரிக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Muumbi, Susan (29 November 2013). "Keeping the African elephant alive". The EastAfrican இம் மூலத்தில் இருந்து 15 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140715001242/http://www.theeastafrican.co.ke/magazine/Keeping-the-African-elephant-alive/-/434746/2093508/-/9fh9yh/-/index.html. பார்த்த நாள்: 15 June 2014. 
  2. Plesant, Maranda (31 December 2013). "Ian Saunders, COO Tsavo Trust". Origin இம் மூலத்தில் இருந்து 14 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714203246/http://www.originmagazine.com/2013/12/31/ian-saunders-coo-tsavo-trust-part-1/. பார்த்த நாள்: 15 June 2014. 
  3. Peralta, Eyder (14 June 2014). "One of Kenya's Legendary 'Tuskers' Is Killed By Poachers". NPR இம் மூலத்தில் இருந்து 16 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140616035336/http://www.npr.org/blogs/thetwo-way/2014/06/14/321972100/one-of-kenyas-legendary-tuskers-is-killed-by-poachers. பார்த்த நாள்: 15 June 2014. 
  4. Kahumbu, Paula (2014). "Kenya's biggest elephant killed by poachers". The Guardian இம் மூலத்தில் இருந்து 16 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140616094947/http://www.theguardian.com/environment/africa-wild/2014/jun/13/kenyas-biggest-elephant-killed-by-poachers. பார்த்த நாள்: 15 June 2014. 
  5. Flood, Zoe (14 June 2014). "Poachers kill one of the world's largest elephants in Kenya". The Daily Telegraph இம் மூலத்தில் இருந்து 15 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140615221723/http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/kenya/10899944/Poachers-kill-one-of-the-worlds-largest-elephants-in-Kenya.html. பார்த்த நாள்: 15 June 2014. 
  6. "Kenya's iconic elephant Satao is dead in Tsavo". 15 June 2014 இம் மூலத்தில் இருந்து 15 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140615031808/http://standardmedia.co.ke/ktn/index.php?videoID=2000079848&video_title=kenya-s-iconic-elephant-satao-is-dead-in-tsavo. பார்த்த நாள்: 15 June 2014. 
  7. "National Wildlife Census 2021 Report" (PDF). Ministry of Tourism & Wildlife. WRTI and KWS. பார்க்கப்பட்ட நாள் 27 March 2023.
  8. "Taita Taveta Wildlife Conservancies Association". TTWCA. பார்க்கப்பட்ட நாள் 27 March 2023.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவோ_அறக்கட்டளை&oldid=3939401" இலிருந்து மீள்விக்கப்பட்டது