சாஸ்திரா இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் தொழில்நுட்ப விழாவாகும்.சாஸ்திரா என்ற வடமோழி சொல்லுக்கு அறிவியல் என்ற பொருள் கொண்டு இவ்விழாவிற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பெயருக்கேற்ப அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான போட்டிகளும் சொற்பொழிவுகளும்,செயல்விளக்கங்களும்,பயிலரங்கங்களும் காணொளி மாநாடுகளும் இந்த விழாவில் நடத்தப்படுகின்றன. இது வழமையாக அக்டோபர் திங்கள் முதல் பதினைந்து நாட்களில் நான்கு பகல்கள் மற்றும் ஐந்து இரவுகளில் நடத்தப்படுகிறது. 2000ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த விழா இதுவரை ஒன்பது முறை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொறியியல் மாணவர்கள் தங்கள் தொழிற்திறமை,கண்டுபிடிப்பு முனைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்த இது நல்ல தளமாக அமைந்துள்ளது.முற்றிலும் மாணவர்களாலேயே நிர்வகிக்கப்படும் இந்த விழாவிற்கு உலகிலேயே முதன்முறையாக இத்தகைய நிகழ்ச்சிக்கு ஐ.எசு.ஓ 9001:2000 தகுதரம் கொடுக்கப்பட்டுள்ளது ஓர் சிறப்பாகும்.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாஸ்திரா&oldid=3367171" இலிருந்து மீள்விக்கப்பட்டது