சா முகமது உமைர்
சா முகமது உமைர் (Shah Mohamad Umair) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1903 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் ஒரு தலைவராகவும் இருந்தார். 1939 ஆம் ஆண்டு முதல் 1951 ஆம் ஆண்டு வரை பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும், 1956 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.[1][2][3][4][5]
சா முகமது உமைர் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1903 |
இறப்பு | 20 பெப்ரவரி 1978 | (அகவை 74–75)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பீபி மசூதா |
பெற்றோர் | சா அசுபக் ஊசைன் (தந்தை) |
இவரது மருமகன் சா முசுடாக்கு 1952 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் சிக்கந்திரா சட்டமன்றத் தொகுதியில் இருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]
இவரது பேரன், சா முசுடாக்கின் மகன் சா தாரிக் அன்வரும் ஓர் அரசியல்வாதியாவார். தேசியவாத காங்கிரசு கட்சியின் நிறுவனராகவும் இவர் அறியப்படுகிறார். மேலும் இவர் கதிகார் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
பதவிகள்
தொகு# | தொடக்கம் | முடிவு | பதவி |
---|---|---|---|
1 | 1939 | 1951 | பீகார் சட்ட மேலவை உறுப்பினர்
|
2 | 1956 | 1962 | நாடாளுமன்ற உறுப்பினர் - மாநிலங்களவை |
மேற்கோள்கள்
தொகு- ↑ Sabha, India Parliament Rajya (1960). Parliamentary Debates: Official Report (in ஆங்கிலம்). Council of States Secretariat.
- ↑ Sabha, India Parliament Rajya (1961). Who's who (in ஆங்கிலம்). Rajya Sabha Secretariat.
- ↑ Sabha, India Parliament Rajya (2003). Rajya Sabha Members: Biographical Sketches, 1952-2003 (in ஆங்கிலம்). Rajya Sabha Secretariat.
- ↑ The Journal of Parliamentary Information (in ஆங்கிலம்). Lok Sabha Secretariat. 1978.
- ↑ Member_Biographical_Book.pdf. https://cms.rajyasabha.nic.in/UploadedFiles/ElectronicPublications/Member_Biographical_Book.pdf.
- ↑ Ashraf, Md Umar (2021-01-31). "जब गुरूदक्षिणा के रूप में शाह मुश्ताक़ को श्रीबाबू ने बनाया विधायक" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-16.