பீகார் சட்டப் பேரவை

பீகார் சட்டப் பேரவை இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஈரவை பீகார் சட்டமன்றத்தின் கீழவை ஆகும். முதல் மாநில தேர்தல் 1952 இல் நடைபெற்றது.[4]

பீகார் சட்டப் பேரவை
17வது பீகார் சட்டப் பேரவை
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
தலைமை
இராசேந்திர அர்லேகர்
17 பெப்ரவரி 2023 முதல்
சட்டமன்ற செயலாளர்
படேஷ்வர் நாத் பாண்டே
பேரவைத் தலைவர்
நந்த் கிஷோர் யாதவ், பா.ச.க.[2]
15 பெப்ரவரி 2024 முதல்
துணை பேரவைத் தலைவர்
அவைத் தலைவர்
(முதலமைச்சர்)
அவை துணைத் தலைவர்
(துணை முதலமைச்சர்)
விஜய் குமார் சின்ஹா, பா.ச.க.
சாம்ராட் சௌத்ரி, பா.ச.க.
28 சனவரி 2024 முதல்
எதிர்க்கட்சித் தலைவர்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்243
அரசியல் குழுக்கள்
அரசு (134)
     தே.ச.கூ. (134)

அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சிகள் (107)

     இந்தியா (106)

மற்ற எதிர்க்கட்சி (1)

     அ.இ.ம.இ.மு. (1)

காலி (2)

     காலி (2)
தேர்தல்கள்
First-past-the-post
அண்மைய தேர்தல்
அக்டோபர் - நவம்பர் 2020
அடுத்த தேர்தல்
அக்டோபர் - நவம்பர் 2025
கூடும் இடம்
பீகார் மாநில சட்டமன்றம், பட்னா, பீகார், இந்தியா
வலைத்தளம்
பீகார் சட்டப் பேரவை

பீகார் பிரிவினைக்கு முன், ஒரு நியமன உறுப்பினர் உட்பட சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் பலம் 331 ஆக இருந்தது. பிரிவினைக்குப் பிறகு, உறுப்பினர்கள் 243 ஆகக் குறைக்கப்பட்டன. சிறி கிருட்டிணா சின்கா அவையின் முதல் தலைவராகவும் , முதல் முதலமைச்சராகவும் ஆனார், அனுக்ரா நாராயண் சின்கா அவையின் முதல் துணைத் தலைவராகவும் முதல் துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

வரலாறு

தொகு

இந்திய அரசுச் சட்டம், 1935 இயற்றப்பட்ட பிறகு, பீகார் மற்றும் ஒரிசா தனி மாநிலங்களாக மாறியது. சட்டத்தின்படி ஈரவை கள் கொண்ட சட்டமன்றம் அறிமுகப்படுத்தப்பட்டது. 22 சூலை 1936 இல், முதல் பீகார் சட்ட மேலவை அமைக்கப்பட்டது. அதில் 30 உறுப்பினர்கள் இருந்தனர் மற்றும் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் தலைவராக இருந்தார். பீகார் சட்டமன்றத்தின் இரு அவைகளின் முதல் கூட்டு அமர்வு 22 சூலை 1937 இல் நடந்தது. பீகார் சட்டப் பேரவையின் பேரவைத் தலைவர் இராம் தயாலு சிங் தேர்வு செய்யப்பட்டார்.[6]

பீகார் சட்டப் பேரவை பதவிக் காலங்கள்

தொகு

பீகார் சட்டப் பேரவை தொடங்கப்பட்ட மற்றும் கலைக்கப்பட்ட தேதிகள் பின்வருமாறு. ஒவ்வொரு சட்டப் பேரவைக்கும் முதல் அமர்வு தேதி மற்றும் பதவிக்காலம் முடிக்கும் தேதி ஆகியவை தொடக்க மற்றும் கலைப்பு தேதிகளில் இருந்து தேதிகளிலிருந்து (முறையே) வேறுபட்டிருக்கலாம்.

சட்டப் பேரவை தொடக்கம் கலைப்பு நாள்கள் பேரவைத் தலைவர் அமைச்சரவை
இடைக்கால அரசு 25 ஏப்ரல் 1946 19 மே 1952 2,041 பிந்தேஸ்வரி பிரசாத் வர்மா முதல் சிறி கிருட்டிணா சின்கா அமைச்சரவை
1வது 20 மே 1952 31 மார்ச் 1957 1,776 இரண்டாவது சிறி கிருட்டிணா சின்கா அமைச்சரவை
2வது 20 மே 1957 15 மார்ச் 1962 1,760 மூன்றாவது சிறி கிருட்டிணா சின்கா அமைச்சரவை (1961 வரை)
தீப் நாராயண் சிங் இடைக்கால அமைச்சரவை (17 நாள்கள்)
முதல் பினோதானந்த் ஜா அமைச்சரவை (1961-62)
3வது 16 மார்ச் 1962 16 மார்ச் 1967 1,826 லக்ஷ்மி நாராயண் சுதன்ஷு
4வது 17 மார்ச் 1967 26 பெப்ரவரி 1969 712 தானிக் லால் மண்டல்
5வது 26 பெப்ரவரி 1969 28 மார்ச் 1972 1,126 இராம்நாராயண் மண்டல்
6வது 29 மார்ச் 1972 30 ஏப்ரல் 1977 1,858 ஹரி நாத் மிஸ்ரா
7வது 24 சூன் 1977 17 பெப்ரவரி 1980 968 திரிபுராரி பிரசாத் சிங்
8வது 8 சூன் 1980 12 மார்ச் 1985 1,738 இராதானந்தன் ஜா
9வது 12 மார்ச் 1985 10 மார்ச் 1990 1,824 சிவ சந்திர ஜா (1989 வரை)

ஹிதாயத்துல்லா கான்

10வது 10 மார்ச் 1990 28 மார்ச் 1995 1,844 குலாம் சர்வார்
11வது 4 ஏப்ரல் 1995 2 மார்ச் 2000 1,795 தியோ நாராயண் யாதவ்
12வது 3 மார்ச் 2000 6 மார்ச் 2005 1,830 சதானந்த் சிங்
13வது 7 மார்ச் 2005 24 நவம்பர் 2005 263 உதய் நாராயண் சௌத்ரி
14வது 24 நவம்பர் 2005 26 நவம்பர் 2010 1,829 இரண்டாவது நிதிஷ் குமார் அமைச்சரவை
15வது 26 நவம்பர் 2010 20 நவம்பர் 2015 1,821 மூன்றாவது நிதிஷ் குமார் அமைச்சரவை (2010–14)
ஜீதன் ராம் மாஞ்சி அமைச்சரவை (2014-15)
நான்காவது நிதிஷ் குமார் அமைச்சரவை (2015-15)
16வது 20 நவம்பர் 2015 14 நவம்பர் 2020[7] 1,821 விஜய் குமார் சவுத்ரி ஐந்தாவது நிதிஷ் குமார் அமைச்சரவை (2015–17)
ஆறாவது நிதிஷ் குமார் அமைச்சரவை (2017-20)
17வது 16 நவம்பர் 2020 பதவியில் 1505 விஜய் குமார் சின்கா (9 ஆகத்து 2022 வரை)

அவத் பீகாரி சௌத்ரி (28 சனவரி 2024 வரை)

நந்த் கிஷோர் யாதவ் (15 பெப்ரவரி 2024 முதல்)[8]

ஏழாவது நிதிஷ் குமார் அமைச்சரவை (2020-22)
எட்டாவது நிதிஷ் குமார் அமைச்சரவை (2022-2024)
ஒன்பதாவது நிதிஷ் குமார் அமைச்சரவை (2024-தற்போது)

வேலை

தொகு

பீகார் சட்டப் பேரவை நிரந்தரமான அமைப்பல்ல, கலைப்புக்கு உட்பட்டது. சட்டப் பேரவையின் பதவிக்காலம், விரைவில் கலைக்கப்படாவிட்டால், அதன் முதல் அமர்வுக்கு நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஆகும். சட்டப் பேரவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் மூன்று அமர்வுகள் (நிதியறிக்கை அமர்வு, மழைக்கால அமர்வு, குளிர்கால அமர்வு) உள்ளன.

சட்டப் பேரவையின் அமர்வுகள் பேரவைத் தலைவர் தலைமையில் நடைபெறும் மற்றும் ஒரு மசோதா சாதாரண மசோதா அல்லது பண மசோதா என்பதை பேரவைத் தலைவர் சான்றளிக்கிறார். பொதுவாக அவர் வாக்களிப்பில் பங்கேற்க மாட்டார், ஆனால் அவர் வெற்றி-தோல்வியற்ற நிலையில் வாக்களிப்பார். பீகார் சட்டப் பேரவையின் தற்போதைய பேரவைத் தலைவராக நந்த் கிஷோர் யாதவ் உள்ளார்.[8] சட்டப் பேரவையில் செயலாளரின் தலைமையில் ஒரு செயலகம் உள்ளது. அவர் பேரவைத் தலைவரின் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளார். செயலாளரின் பணி பேரவைத் தலைவருக்கு உதவுவதாகும். படேஷ்வர் நாத் பாண்டே பீகார் சட்டப் பேரவையின் தற்போதைய செயலாளராக உள்ளார்.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "JD(U)'s Narendra Narayan Yadav elected unopposed as Bihar assembly deputy speaker". The Indian Express (in ஆங்கிலம்). 23 February 2024. பார்க்கப்பட்ட நாள் 23 February 2024.
  2. "BJP leader Nand Kishore Yadav elected Speaker of Bihar Assembly". Hindustan Times (in ஆங்கிலம்). 15 February 2024. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
  3. "Congress MLAs Murari Prasad Gautam and Siddharth Saurav, and RJD MLA Sangita Kumari join BJP". India TV News. 27 February 2024. பார்க்கப்பட்ட நாள் 27 February 2024.
  4. "Bihar poll dates announced: Some facts youn need to know about Bihar Legislative Assembly". www.oneindia.com இம் மூலத்தில் இருந்து 20 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161120003852/http://www.oneindia.com/feature/bihar-poll-dates-announced-some-facts-need-know-about-bihar-legislative-assembly-1863907.html. 
  5. "First Polls, first rift, first rush:Bihar 1952 CM SK Sinha Dy CM Dr AN Sinha". பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.
  6. "Bihar Vidhan Sabha" (PDF). பார்க்கப்பட்ட நாள் 24 September 2022.
  7. Etemaad (14 November 2020). "Bihar Governor Phagu Chauhan Formally Dissolved 16th Legislative Assembly". https://www.en.etemaaddaily.com/world/national/bihar-governor-phagu-chauhan-formally-dissolved-16th-legislative-assembly:85612. 
  8. 8.0 8.1 "BJP leader Nand Kishore Yadav elected Speaker of Bihar Assembly". Hindustan Times (in ஆங்கிலம்). 2024-02-15. பார்க்கப்பட்ட நாள் 2024-02-15.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீகார்_சட்டப்_பேரவை&oldid=3942611" இலிருந்து மீள்விக்கப்பட்டது