இராசேந்திர அர்லேகர்

இந்திய அரசியல்வாதி

இராசேந்திர அர்லேகர் (Rajendra Arlekar) என்பவர் இமாச்சலப் பிரதேசத்தின் தற்போதைய மற்றும் 21வது ஆளுநர் ஆவார். இவர் கோவா அரசாங்கத்தில் அமைச்சராகவும் , கோவா சட்டப் பேரவையின் முன்னாள் சபாநாயகராகவும் இருந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவர் ஆவார்.

இராசேந்திர அர்லேகர்
பாரதிய ஜனதா கட்சி தலைவர்
29வது பீகார் ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 பிப்ரவரி 2023
முன்னையவர்பாகு சவுகான்
21வது இமாச்சலப் பிரதேச ஆளுநர்
பதவியில்
13 சூலை 2021 – 13 பிப்ரவரி 2023
முன்னையவர்பி. தத்தாத்திரேயா
பின்னவர்சிவ பிரதாப் சுக்லா
வனம், சுற்றுச்சூழல் மற்றும் ஊரட்சி அமைச்சர், கோவா அரசு
பதவியில்
1 அக்டோபர் 2015 – 2017 [1]
சட்டமன்ற உறுப்பினர், கோவா
பதவியில்
2012–2017
முன்னையவர்தயானந்த சோப்தே
பின்னவர்மனோகர் அஜாகோன்கர்
தொகுதிபெர்னெம்
சட்டமன்ற உறுப்பினர் கோவா
பதவியில்
2002–2007
முன்னையவர்ஜோசு பிலிப் டிசோசா
பின்னவர்ஜோசு பிலிப் டிசோசா
தொகுதிவாசுகோ
சபாநாயகர், கோவா சட்டமன்றம்
பதவியில்
2012–2015
முன்னையவர்பிரதாப்சிங் ரானே
பின்னவர்அனந்த் ஷெட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 ஏப்ரல் 1954 (1954-04-23) (அகவை 70)
பனாஜி, கோவா
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்அனாஹா அர்லேகர்
உறவுகள்மணமானவர்
பிள்ளைகள்2
தொழில்அரசியல்வாதி
செயற்குழுதலைவர், வர்த்தக ஆலோசனைக் குழு
பதவிமேனாள் சபாநாயகர், கோவா சட்டமன்றம்
இணையத்தளம்http://www.rajendraarlekar.in

அரசியல் வாழ்க்கை

தொகு

அர்லேகர் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் தொடர்புடையவர். 1989ல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 1980களிலிருந்து கோவா பாஜகவின் தீவிர உறுப்பினராக இருந்து வருகிறார். பின்வரும் பல்வேறு பதவிகளை பாஜகவில் வகித்துள்ளார்: பொதுச் செயலாளர், பாரதிய ஜனதா கட்சி, கோவா பிரதேசம். தலைவர், கோவா தொழில் வளர்ச்சிக் கழகம். தலைவர், கோவா மாநில பட்டியல் சாதியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் நிதி மேம்பாட்டுக் கழகம். பொதுச் செயலாளர், பாரதிய ஜனதா, கோவா. தெற்கு கோவா தலைவர், பாரதிய ஜனதா கட்சி.

2014-ல் மனோகர் பாரிக்கர் மத்திய பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றபோது, அர்லேகர் அடுத்த முதலமைச்சராகப் பரிசீலிக்கப்பட்டார், ஆனால் அதற்குப் பதிலாக லக்ஷ்மிகாந்த் பர்சேகரை அடுத்த முதலமைச்சராகக் கட்சி தேர்வு செய்தது.

கோவா சட்டப் பேரவையைக் காகிதமில்லாததாக மாற்றிய பெருமைக்குரியவர், அவ்வாறு செய்த முதல் மாநில சட்டமன்றம். பின்னர் 2015-ல் அமைச்சரவை மாற்றத்தின் போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஆளுநராக

தொகு

இமாச்சலப்பிரதேச ஆளுநராக இருந்த பண்டாரு தத்தாத்ரேயா அரியானா ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, அர்லேகர் இமாச்சல பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். அர்லேகர் சூலை 13, 2021 முதல் இப்பதவியில் உள்ளார். பாஜக என்பது ஒவ்வொரு உறுப்பினரின் பணியும் அங்கீகரிக்கும் கட்சி என்று அர்லேகர் கூறினார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Pernem MLA Rajendra Arlekar takes oath as minister - Times of India". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 9 January 2018.
  2. author/ians (2021-07-06). "Ex-Goa Speaker Rajendra Arlekar is new Himachal Governor | english.lokmat.com". Lokmat English (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-06. {{cite web}}: |last= has generic name (help)

2. https://english.lokmat.com/politics/ex-goa-speaker-rajendra-arlekar-is-new-himachal-governor/

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசேந்திர_அர்லேகர்&oldid=4165317" இலிருந்து மீள்விக்கப்பட்டது