மனோகர் அஜாகோன்கர்
மனோகர் திரிம்பக் அஜ்காவ்ன்கர் (Manohar Trimbak Ajgaonkar) (பிறப்பு 6 நவம்பர் 1954) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் கோவாவின் சட்டமன்றத்திற்கு முதன் முதலாக பெர்னேம் நகரத்தின் தர்காலிம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மனோகர் அஜ்காவோன்கர் | |
---|---|
கோவாவின் துணை முதலமைச்சர் | |
பதவியில் 28 மார்ச்சு 2019 – 10 மார்ச்சு 2022 | |
முன்னையவர் | சுதின் தவாலிகர் |
பின்னவர் | incumbent |
தொகுதி | பெர்னேம் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மனோகர் திரிம்பக் அஜ்காவோன்கர் 6 நவம்பர் 1954 மட்காவ், கோவா (மாநிலம்), போர்த்துகேய இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | மட்காவ், கோவா (மாநிலம்) |
கல்வி | 10ஆம் வகுப்பு தேர்ச்சி |
தொழில் | வணிகம் |
இவர் தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து தொடங்கினார். இவர் 2002 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவர் 2007 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு மீண்டும் திரும்பி தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டில் மகாராட்டிரவாதி கோமந்த கட்சியில் இணைந்தார். வடக்கு கோவா மாவட்டத்தின் பெர்னேம் தொகுதியின் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.[4]
இவர் மீண்டும் 2019 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மகாராட்டிரவாதி கோமந்த கட்சி to one seat in the கோவாவின் சட்டமன்றம். இவர் கோவா மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Another jolt to Congress: Now, Babu Azgaonkar to join MGP". The Times of India. 18 December 2016. https://timesofindia.indiatimes.com/city/goa/Another-jolt-to-Congress-Now-Babu-Azgaonkar-to-join-MGP/articleshow/56042565.cms.
- ↑ My neta
- ↑ Sopte quits BJP, joins Cong with Patanekar
- ↑ Babu joins MGP to contest from Pernem
- ↑ Manohar Ajgaonkar appointed deputy chief minister days after he quit MGP and joined BJP